உலகத் தாய்மொழி தினம்: முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து!

author img

By

Published : Feb 21, 2022, 2:15 PM IST

cm-stalin-tweet-mother-language-day

சமமான இந்தியாவைக் காண நாம் அனைவரும் உறுதியேற்போம் என முதமைச்சர் ஸ்டாலின் உலகத் தாய்மொழி தினத்தை முன்னிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை : உலகத் தாய்மொழி தினம் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21ஆம் தேதி அன்று கடைபிடிக்கப்படுகிறது. இந்நிலையில், பலரும் தங்கள் தாய்மொழி தின வாழ்த்தினை தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது வாழ்த்தினை பதிவு செய்துள்ளார். அதில், “உலகத் தாய்மொழி நாளில், தங்கள் மொழிகளைப் பாதுகாக்கவும் உரிமைகளை நிலைநாட்டவும் போராடிய தியாகியருக்கு எனது வணக்கத்தைச் செலுத்துகிறேன்.

  • உலகத் தாய்மொழி நாளில், தங்கள் மொழிகளைப் பாதுகாக்கவும் உரிமைகளை நிலைநாட்டவும் போராடிய தியாகியருக்கு எனது வணக்கத்தைச் செலுத்துகிறேன். (1/2)

    — M.K.Stalin (@mkstalin) February 21, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அவர்களது தியாகத்தில் இருந்து பெறும் உணர்வெழுச்சிக் கொண்டு, ஒற்றை மொழியின் ஆதிக்கம் இன்றி - அனைத்து மொழிகளும் சமமாக நடத்தப்படும். அனைவருக்கும் சமமான இந்தியாவைக் காண நாம் அனைவரும் உறுதியேற்போம்” எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க : தலைமை செயலரை சந்திக்கிறார் கமல் ஹாசன்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.