காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டு!

காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டு!
காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற வீரர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை: இங்கிலாந்து நாட்டின் பர்மிங்ஹாம் நகரில் 22 ஆவது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று ஆடவருக்கான 67 கிலோ எடைப்பிரிவில் பளுதூக்குதல் வீரர் ஜெரமி லால்ரினுங்கா தங்கப்பதக்கம் வென்றார். அதேபோல் 73 கிலோ எடை பிரிவில் பளுதூக்கும் வீரர் அச்சிந்தா ஷூலி 313 கிலோ (143கிலோ + 170கிலோ) பளு தூக்கி தங்கப்பதக்கம் வென்றார்.
இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற வீரர்களுக்கு தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில், “இளம் திறமையாளர்களான ஜெரமி லால்ரினுங்கா மற்றும் அச்சிந்தா ஷூலி ஆகியோர் காமன்வெல்த் போட்டி 2022 ல் இந்தியாவிற்காக மேலும் இரண்டு பதக்கங்களை பெற்றுள்ளனர்.
-
Young talents @raltejeremy and #AchintaSheuli have clinched two more 🥇🥇 for India at #B2022.
— M.K.Stalin (@mkstalin) August 1, 2022
Congratulations to both on their stupendous success and wishing all the best for their future endeavours. pic.twitter.com/orJ2XRq2eV
இந்த இருவரின் அபரிமிதமான வெற்றிக்கு வாழ்த்துகள். மேலும் இவர்களின் எதிர்கால வெற்றிகளுக்கும் எனது நல்வாழ்த்துகள்” என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: CWG 2022: பளுதூக்குதலில் தங்கம் வென்றார் அச்சிந்தா ஷூலி!
