H3N2 வைரஸ் பரவலை தடுப்பது எப்படி? பாதிப்பு குறைவது எப்போது? - நோய்த்தொற்று சிகிச்சை மருத்துவர் மதுமிதா

author img

By

Published : Mar 17, 2023, 8:29 AM IST

Etv Bharat

H3N2 வைரஸ் காய்ச்சல் கரோனா தொற்றைப் போன்றே வாய் மற்றும் சுவாச உறுப்புகளின் மூலம் பரவும் எனவும், இரும்பல் மற்றும் தும்மலின் போது வாயை கைகளால் மூடிக்கொள்ள வேண்டும் என நோய்த் தொற்று சிகிச்சை மருத்துவர் மதுமிதா அறிவுறுத்தியுள்ளார்.

மருத்துவர் மதுமிதா பிரத்யேக பேட்டி

சென்னை: பருவகால வைரஸ் காய்ச்சல் எனப்படும் எச்3என்2(H3N2) வகை காய்ச்சலால் சிறு குழந்தைகள் மற்றும் முதியோர் வரை பாதிக்கப்படக்கூடியவர்களாக உள்ளனர். எச்3என்2 காய்ச்சலால் கர்நாடகா மற்றும் ஹரியானாவில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் திருச்சியில் 27 வயது இளைஞர் உயிரிழந்ததற்கு கரோனா தொற்றா? அல்லது காய்ச்சல் காரணமா? என ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்தியாவில் மழைக் காலத்துக்குப் பின்பு ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான காலத்திலும் காய்ச்சல் பாதிப்பு ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் காணப்படுகிறது. இந்த பருவகால வைரஸ் காய்ச்சல் மார்ச் இறுதியிலிருந்து குறையும் என மத்திய அரசு எதிர்பார்க்கிறது.

அறிகுறிகள்: இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சல் (Influenza virus fever) என்பது ஒரு சுவாச தொற்று நோய் ஆகும். இது மூக்கு, தொண்டை மற்றும் சில நேரங்களில் நுரையீரலை பாதிக்கும் இன்புளூயன்சா என்ற வகை வைரஸால் ஏற்படுவதாக கூறப்படுகிறது. அதன் அறிகுறிகளால் தசை வலி, சோர்வு, தலைவலி, இருமல் குறிப்பாக இரவில் அதிகரிக்கமாக இருமல், தொண்டைப் புண், சோர்வு, மூச்சுத்திணறல் ஆகியவை முக்கிய அறிகுறிகளாக இருக்கும்.

மாஸ்க் அணிய வேண்டும்: இன்புளூயன்சா வைரஸ் நோய்தொற்று சிகிச்சை மருத்துவர் மதுமிதா நமது ஈடிவி பாரத்திற்கு அளித்த பிரத்தியேக நேர்காணலில், 'பருவக்காலத்தில் வரக்கூடிய வைரஸ் தொற்று இன்புளூயன்சா காய்ச்சல். இந்தக் காய்ச்சல் ஜனவரி மாதம் துவங்கி மார்ச் மாதம் வரை நீடித்து வருகிறது. சுவாச உறுப்புகளின் மூலம் நோய் தொற்று பரவுகிறது. இருமல், தும்மல் போன்றவற்றின் மூலமாகவும் ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பரவும் வாய்ப்புள்ளது. தற்பொழுது குழந்தைகள் பள்ளிகளுக்கு செல்லும் போது மாஸ்க் அணிவதில்லை. இதனால், மற்றவருக்கு பரவுவதும் அதிகமாக இருக்கிறது. வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை அதிகளவில் பார்க்கிறோம். எச்1என்1 எனப்படும் பன்றிக்காய்சல், என்2என்3 என்ற வகையிலான வைரஸ் காய்ச்சலையும் பார்த்துக் கொண்டு இருக்கிறோம். அடினாே வைரஸ் பாதிக்கப்பட்டும் சிகிச்சைக்கு வருகின்றனர்.

வைரஸ் தடுப்பு: கரோனா தொற்று சுவாச உறுப்புகளின் மூலம் எவ்வாறு பரவியதோ அதேபோன்று பரவும் தன்மைக் கொண்டது. தடுப்பூசியை போட்டும் நோய் தொற்று பரவாமல் தடுக்க முடியும். இன்புளூயன்சா தடுப்பூசியும் மற்ற தடுப்பூசிகள் போல் ஆய்வு செய்யப்பட்டப் பின்னர் தான் வருகிறது. எனவே, ஆண்டுத்தோறும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். உலக சுகாதார நிறுவனம் ஆண்டு தோறும் இன்புளூன்சா தடுப்பூசியில் மாற்றம் செய்து கொண்டு வருவார்கள். எனவே அக்டோபர், நவம்பர் மாதங்களில் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். இதனால் நோய் தீவிரமாக பரவுவதை தடுக்க முடியும்' என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர், 'காய்ச்சல் வந்தவர்களுக்கு காய்ச்சல், சளிக்கு அளிக்கும் மருந்து அளித்தால் போதுமானது. 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளை, வயதானவர்களுக்கு ஆண்டி வைரல் மருந்து அளிக்கப்படும். இதற்கு ஆண்டிபாயடிக் மருந்து வேலை செய்யாது. எனவே, அருகில் உள்ள மருத்துவரின் ஆலோசனையை பெற்றுத்தான் மருந்து எடுக்க வேண்டும்.

இந்த வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. ஆனால், நோய் தொற்றின் தீவிரம் அதிகமாக இல்லை. சிறிய அளவிலான அறிகுறிகளுடன் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஒரு சிலருக்கு காய்சல், இருமல் இருக்கிறது. அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டியதிருக்கிறது. நோய் தொற்று ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பரவாமல் இருப்பதற்கு கரோனா தொற்றுக்கான பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி தும்மல், இருமல் செய்ய வேண்டும். கைகளை சுத்தாமாக வைத்திருக்க வேண்டும். பொது இடங்களுக்கு செல்லும் போது மாஸ்க் அணிய வேண்டும்.

நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டில் இருந்து சூடான பொருட்களை உட்கொள்ள வேண்டும். முக கவசம் அணிவது என்பது நாம் நம்மை பாதுகாத்துக் கொள்வதற்கு தான். இன்புளூன்சா என்பது முற்றிலும் அழிந்துவிடாது. இது மாற்றம் அடைந்து மீண்டும் வரும். தற்பொழுது வந்துள்ள பாதிப்பு மார்ச் மாதம் குறைந்து விடும். இதற்கு தடுப்பூசி போட்டுக் கொள்வது சிறந்தது" என அறிவுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: ஜெயலலிதாவின் சொத்தில் தனக்கும் பங்கு வேண்டும் - தீபா தரப்புக்கு இறுதி அவகாசம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.