முதலமைச்சரை ரோம் நகருக்கு வரச்சொல்லி அழைத்த கத்தோலிக்க பேராயர்கள்

author img

By

Published : Nov 24, 2021, 6:12 PM IST

Catholic Archbishop invited the Chief Minister

2022ஆம் ஆண்டு ரோம் நகரில் நடைபெற உள்ள புனிதர் பட்டம் வழங்கும் நிகழ்வில், புனிதராக தமிழர் தேவசகாயத்துக்கு பட்டம் வழங்கப்படயிருக்கிறது. இந்நிகழ்வில் கலந்துகொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கத்தோலிக்க பேராயர்கள் அழைப்பு விடுத்தனர்.

சென்னை: தலைமைச் செயலகத்தில் சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், கத்தோலிக்க பேராயர்கள் ஆகியோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை 2022ஆம் ஆண்டு ரோம் நகரில் நடைபெற உள்ள மறைந்த தேவசகாயத்திற்கு புனிதர் பட்டம் வழங்கும் நிகழ்விற்கு வருமாறு அழைப்பு விடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், "கன்னியாகுமரி மாவட்டம், காற்றாடி மலையைச் சேர்ந்த தேவசகாயத்திற்கு போப் ஆண்டவர் புனிதர் பட்டம் வழங்க உள்ளார்.

இந்த நிகழ்வு 2022 மே மாதம் 15ஆம் தேதி ரோம் நகரில் நடைபெற உள்ளது. அந்த விழாவில் பங்கேற்க முதலமைச்சருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. முதலமைச்சரும் ஆர்வத்துடன் பரிசீலிப்பதாகத் தெரிவித்து உள்ளார்" என்றார்.

முதல் தமிழர் புனிதர்

கத்தோலிக்க பேராயர்கள் முதலமைச்சருக்கு அழைப்பு

பின்னர் பேசிய சென்னை மயிலை மறைமாவட்ட பேராயர் ஜார்ஜ் ஆண்டனி சாமி, "முதல் தமிழர் புனிதராக உயர்ந்துள்ளார். இந்த விழாவில் பங்கேற்க முதலமைச்சரை அழைத்தோம். கட்டாயம் வருவார் என்கிற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது" என்றார்.

இதையும் படிங்க: அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஸ்டாலின் ஆலோசனை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.