21 சிறந்த எழுத்தாளர்களுக்குப் பரிசுத்தொகை வழங்கி முதலமைச்சர் பாராட்டு

author img

By

Published : May 13, 2022, 5:25 PM IST

21 சிறந்த எழுத்தாளர்களுக்குப் பரிசுத்தொகை வழங்கி முதலமைச்சர் பாராட்டு

கலை, இலக்கிய மேம்பாட்டுச் சங்கத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்ட 21 சிறந்த எழுத்தாளர்களுக்குப் பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச சான்றிதழ்களை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று (13.5.2022) முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை, இலக்கிய மேம்பாட்டுச் சங்கத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்ட 21 சிறந்த எழுத்தாளர்களுக்கு முதல் தவணைத் தொகையாக தலா 25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை இலக்கிய மேம்பாட்டுப் பணிக்கான தனி பணிக்குழு நிதியிலிருந்து (CORPUS FUND) கிடைக்கும் வட்டித்தொகையினைக் கொண்டு ஆதிதிராவிடர் / பழங்குடியினர் / மதம் மாறிய ஆதிதிராவிட கிறிஸ்தவர்களின் சிறந்த 10 படைப்புகள் மற்றும் ஆதிதிராவிடர் அல்லாதோர் ஒருவரின் சிறந்த படைப்பையும் சேர்த்து மொத்தம் 11 படைப்புகளைத் தேர்வுசெய்து, அப்படைப்புக்கு ரூ.50,000/- பரிசுத்தொகையாகவும், பாராட்டுச் சான்றிதழும் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.


அதன்படி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை, இலக்கிய மேம்பாட்டுச் சங்கத்தின் மூலம் 2020-21ஆம் ஆண்டிற்கான சிறந்த படைப்புகளுக்காகத் தேர்வு செய்யப்பட்ட

இ. முருகேசன்(சட்டப்பார்வையில் ஆவணங்கள்),

கு. வாஞ்சிநாதன்(களம் கண்ட தமிழ்),

ஆர். இலங்கேஷ்வரன்(விண்ணைத் துளைக்கும் விழுதுகள்),

புலவர் முனைவர் பி.சிவலிங்கம்(அறிவுலக மேதை அம்பேத்கர்),

பானு ஏழுமலை(அம்பேத்கர் தான் ஆற்றிய உரையும் விவாதங்களும்),

ஆ. பிரியாவெல்சி, (ஆத்மம் பழகு அனைத்தும் பழகு),

பொ. பொன்மணிதாசன் (பொன்மணிதாசன் கவிதைகள்),

கே. சுப்பிரமணி (சிகரங்களுக்கான விலாசங்கள்),

யாக்கன் (டாக்டர் அம்பேத்கர் அரசமைப்புச் சட்ட அவைக்குள் நுழைந்த வரலாறு அதன் பின்னணி அரசியல் சூழ்நிலைகள்),

ஆர். காளியப்பன் (ஆநிரை),

முனைவர் ந. வெண்ணிலா (பழந்தமிழர் மானிடவியல்) ஆகியோருக்கும்;


2021-2022ஆம் ஆண்டிற்கான சிறந்த படைப்புகளுக்காகத் தேர்வு செய்யப்பட்ட எஸ்.கே. அந்தோணிபால் (பறையர்கள் ஆட்சியும் வீழ்ச்சியும்),

த. மனோகரன் (இந்திய நாட்டின் கவுரவம் டாக்டர் அம்பேத்கர்),

புலவர் இர. நாகராஜ் (பைந்தமிழ் பூங்காற்று),

கருவூர் கன்னல் (ஓர் ஊரின் கதை),

அன்புதீபன்(அவள் தேடிய சொந்தம்),

தங்கசெங்கதிர் (எ) த. செந்தில்குமார் (மானுடத் தெறிப்புகள்),

அ.ப.காரல் மார்க்ஸ் சித்தாத்தர் (அம்பேத்கரின் “புத்தரும் அவர் தம்மமும்”),

த. கருப்பசாமி (சித்தர் இலக்கியங்கள் காட்டும் ஆன்மீகமும் மருத்துவமும்),

முனைவர் ம. தமிழ்ச்செல்வி (நிழல் பருகும் நீர்),

முனைவர் ஜெ. மதிவேந்தன் (சங்கம் - ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு நூல்) என மொத்தம் 21 சிறந்த எழுத்தாளர்களுக்கு முதலமைச்சர் முதல் தவணைத் தொகையாக தலா 25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

cash praises were given to 21 writers by CM Stalin
பரிசு பெற்றவர்கள் முதலமைச்சருடன்..
தேசிய அளவிலான பழங்குடியினர் கைவினைப் பொருட்கள் விற்பனை விழாவில், தோடர் பழங்குடியினரின் பூத்தையல் தேசிய அளவில் முதல் பரிசு பெற்றதற்காக, இவ்விழாவில் கலந்து கொண்ட தோடர் பழங்குடியின பெண்களும், பழங்குடியினர் ஆய்வு மைய இயக்குநர் (பொறுப்பு) முனைவர் ச.உதயகுமாரும் தமிழ்நாடு முதலமைச்சரை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

இதையும் படிங்க: ரூ.35.82 கோடி மதிப்புள்ள அரசு கட்டுமானப்பணிகளைத் திறந்து வைத்தார் முதலமைச்சர்


ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.