பி.இ., பி.டெக் கலந்தாய்வு - கம்பியூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவை அதிகளவு தேர்வு செய்த மாணவர்கள்!

author img

By

Published : Oct 17, 2021, 9:03 PM IST

கல்வி ஆலோசகர் அஸ்வின்

பொறியியல் பொதுப்பிரிவு கலந்தாய்வு முடிவடைந்த நிலையில், இந்தாண்டு கம்பியூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவை அதிகளவில் மாணவர்கள் தேர்வு செய்துள்ளனர்.

சென்னை: பி.இ., பி.டெக் பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான கலந்தாய்வு நான்கு சுற்றுகளாக நடைபெற்று இன்று (அக்.17) முடிவடைந்துள்ளது.

இந்தாண்டு கம்பியூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவை அதிகளவில் மாணவர்கள் தேர்வு செய்துள்ளனர். அடுத்ததாக மெக்கானிக்கல் பாடப்பிரிவு, சிவில் பாடப்பிரிவினை குறைவான மாணவர்களே தேர்வு செய்துள்ளனர்.

கல்வி ஆலோசகர் அஸ்வின் இதுகுறித்து கூறுகையில், "பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று முடிவடைந்துள்ளது. இந்த கலந்தாய்வின் மூலம் 59.13 விழுக்காடு இடங்கள் நிரம்பியுள்ளன. கடந்தாண்டு நான்கு சுற்று கலந்தாய்வு முடிவின் போது 44.06 விழுக்காடு இடங்கள் நிரம்பி இருந்தன.

கல்வி ஆலோசகர் அஸ்வின்

7 கல்லூரிகளை ஒருவர் கூட தேர்வு செய்யவில்லை

கடந்த ஆண்டைவிட நடப்பாண்டில் 15 விழுக்காடு இடங்கள் கூடுதலாக நிரம்பியுள்ளன. கடந்தாண்டு 16 பொறியியல் கல்லூரிகளில் ஒரு இடத்தைக் கூட மாணவர்கள் தேர்வு செய்யவில்லை. ஆனால், நடப்பாண்டில் ஏழு கல்லூரிகளில் ஒரு இடம் கூட நிரம்பவில்லை.

1

நடப்பாண்டில் பொறியியல் படிப்பில் மாணவர்களுக்கு ஈர்ப்பு அதிகளவில் இருக்கக் காரணம் கம்பியூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவின் மீது உள்ள மோகம் தான். பொறியியல் படிப்பில் இடங்களை தேர்வுசெய்த 80 ஆயிரத்து 353 மாணவர்களில் 32 ஆயிரத்து 284 மாணவர்கள் கம்பியூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவினை தேர்வு செய்துள்ளனர்.

2

அதற்கு அடுத்ததாக இசிஇ (ECE) பாடப்பிரிவையும், மூன்றாவதாக மெக்கானிக்கல், EEE பாடப்பிரிவையும், கடைசியாக சிவில் இன்ஜினியரிங் படிப்பையும் மாணவர்கள் தேர்வு செய்துள்ளனர்" எனக் கூறினார்.

16 கல்லூரிகளில் 100% இடங்கள் நிரம்பின

அதேபோல், கல்வி ஆலோசகர் ஜெயபிரகாஷ் காந்தி வெளியிட்டுள்ள தகவலில், "நான்கு சுற்றுகளாக நடைபெற்று முடிந்த பொதுப்பிரிவு கலந்தாய்விற்கு அனுமதிக்கப்பட்ட 1 லட்சத்து 35 ஆயிரத்து 773 இடங்களில் 81 ஆயிரத்து 390 இடங்கள் நிரம்பி உள்ளன.

இந்த கலந்தாய்வின் முடிவில் 54 ஆயிரத்து 383 இடங்கள் காலியாக உள்ளன. கடந்தாண்டை விட நடப்பாண்டில் பொறியியல் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது.

3

16 பொறியியல் கல்லூரியில் 100% இடங்களும் நிரம்பி உள்ளன. ஆனால், கடந்தாண்டு 13 கல்லூரிகளில் மட்டுமே அனைத்து இடங்களும் நிரம்பின.

நடப்பாண்டில் 85 கல்லூரிகளில் 90% இடங்களும், 113 கல்லூரிகளில் 80 விழுக்காட்டிற்கும் மேல் உள்ள இடங்களும் நிரம்பி உள்ளன.

50 விழுக்காட்டிற்கும் மேல் 218 கல்லூரியில் இடங்கள் நிரம்பி உள்ளன. 65 கல்லூரிகளில் 10 விழுக்காட்டிற்கும் குறைவான இடங்களே நிரம்பி உள்ளன" என அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 'ஆயிரம் சசிகலா வந்தாலும் அதிமுகவை அசைக்க முடியாது' - சி.வி.சண்முகம் ஆவேசம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.