ETV Bharat / state

அரும்பாக்கம் வங்கி கொள்ளை.. 18 கிலோ தங்கம் மீட்பு

author img

By

Published : Aug 14, 2022, 10:32 PM IST

அரும்பாக்கம் தனியார் நகை கடன் வங்கி கொள்ளையில் 18 கிலோ தங்கம் மீட்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அரும்பாக்கம் வங்கி கொள்ளை, பதினெட்டு கிலோ தங்கம் மீட்பு
அரும்பாக்கம் வங்கி கொள்ளை, பதினெட்டு கிலோ தங்கம் மீட்பு

சென்னை: அரும்பாக்கம் தனியார் நகை கடன் வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட தங்கத்தில் 18 கிலோ தங்கம் மீட்கப்பட்டுள்ளது. கொள்ளை சம்பவத்தில் முருகன் உட்பட ஆறு பேர் ஈடுபட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. கொள்ளை கும்பலைச் சேர்ந்த பாலாஜி ,சக்திவேல் ,சந்தோஷ் ஆகிய மூன்று பேர் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

முக்கிய குற்றவாளி முருகன் உட்பட மீதம் உள்ள கொள்ளையர்கள் பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். முக்கிய கொள்ளை முருகன் நடிகர் அஜித்குமார் நடித்த வலிமை படத்தின் வில்லன் வசனத்தை வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் ஆக வைத்து நேற்று கொள்ளையடித்துள்ளார்.

சென்னை அரும்பாக்கம் தனியார் நகை கடன் வங்கியில் சுமார் 20 கோடி மதிப்புள்ள 32 கிலோ தங்க நகைகளை, அதே நிறுவனத்தில் வேலை பார்க்கும் முருகன் என்பவர் கூட்டாளிகளுடன் சேர்ந்து நேற்று பட்டப் பகலில் கொள்ளையடித்துள்ளார். வங்கியின் காவலாளிக்கு மயக்க மருந்து கொடுத்து ஊழியர்களை கழிவறையில் கட்டி போட்டு துணிகரமாக கொள்ளை சம்பவத்தை நிகழ்த்தியுள்ளார்.

தகவல் அறிந்த உடன் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொள்ளையர்களை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக களம் இறங்கினர். சிசிடிவி காட்சிகள் செல்போன் அழைப்புகள் ஆகிய தொழில்நுட்ப ரீதியாகவும், முக்கிய கொள்ளையும் முருகனின் நண்பர்கள் உறவினர்கள் ஆகியோரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகளும் வெளியாகி இருந்தன. மூன்று கொள்ளையர்கள் இரண்டு இரு சக்கர வாகனத்தில் பரபரப்பாக இறங்கும் சாலையில் பை மூட்டை ஒன்றில் தங்க நகைகளை கொள்ளையடித்த சம்பவம் பதிவாகி இருந்தது. கொள்ளையடிப்பதற்கு முன்பாக கொள்ளையர்கள் நோட்டமிடும் காட்சிகளும் சிசிடிவி-யில் பதிவாகி இருந்தது.

இந்த நிலையில் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக பாலாஜி என்பவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். தொடர் விசாரணை மேற்கொண்டதில் பாலாஜி ,சக்திவேல் ,சந்தோஷ் என கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று பேரை தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட தங்கத்தில் பாதி அளவுக்கு மேல் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 18 கிலோ அளவில் தங்கம் விற்கப்பட்டுள்ளதாகவும் முக்கிய கொள்ளையனான முருகன் மற்றும் இதர கூட்டாளிகளை நெருங்கி விட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. அவர்களிடமிருந்து மீதமுள்ள தங்க நகைகளை காவல்துறையினர் மீட்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் முக்கிய கொள்ளையனான முருகன் இந்த வங்கியில் கடந்த இரண்டு வருடமாக மக்கள் தொடர்பு அதிகாரி போல் பணிபுரிந்து வந்துள்ளார். மேலும் தனியார் ஜிம் ஒன்றில் பயிற்சியாளராகவும் இருந்துள்ளார். முருகன் தொடர்பான நண்பர்கள் உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் உடனடியாக பணக்காரனாக வேண்டும் என்ற எண்ணத்துடன் சமீப நாட்களாக முருகன் இருந்து வந்தது தெரிய வந்துள்ளது.

இந்த உலகத்தில் தப்பு சரி என்பது எதுவும் கிடையாது நாம் செய்யும் வேலையை நியாயப்படுத்த முடியும் என்றால் அது சரி, முடியவில்லை என்றால் தவறு என்ற வசனத்தை தனது வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்து கொள்ளையன் முருகன் தான் செய்யப் போகும் கொள்ளையை நியாயப்படுத்தி ஸ்டேட்டஸ் வைத்து விட்டு கொள்ளை அடித்ததும் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களிடம் துருவித் துருவி விசாரணை மேற்கொள்ளப்பட்டு கொள்ளைச் சம்பவம் குறித்தும் இதில் வேறு யாருக்கும் தொடர்பில் உள்ளதா என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது வரை கொள்ளையன் முருகன் , பாலாஜி ,சக்திவேல் சந்தோஷ் ,சூர்யா மற்றும் மேலும் ஒருவர் என ஆறு பேர் அளவில் கொள்ளை சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைதான மூன்று பேர் விசாரணையில் கொடுக்கும் தகவல்களை வைத்து மீதமுள்ள கொள்ளையர்களை பிடிக்கவும்,நகைகள் மீட்கவும் போலிசார் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:அரும்பாக்கத்தில் வங்கி மேலாளர் வீட்டில் நகை, பணம் திருட்டு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.