ஜெயலலிதா பல்கலை பெயர் மாற்ற விவகாரம்; அதிமுக வெளிநடப்பு!

ஜெயலலிதா பல்கலை பெயர் மாற்ற விவகாரம்; அதிமுக வெளிநடப்பு!
AIADMK MLAs walkout: ஜெயலலிதா பல்கலை கழகத்தின் பெயர் மாற்றத்தை எதிர்த்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளியேறினர்.
சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில், 10 மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றும் விதமாக முதலமைச்சர் கொண்டு வந்த தனித் தீர்மானம் மீது விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா பல்கலைக்கழகத்தின் பெயர் மாற்றம் செய்யப்பட்தற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
அதற்கு, ஜெயலலிதா பல்கலைக்கழத்தின் பெயர் மாற்றப்படவில்லை எனவும், அது தொடர்பான கோப்புகளையும் ஆளுநர் திருப்பி அனுப்பிவிட்டார் எனவும் சபாநாயகர் அப்பாவு விளக்கம் அளித்தார். இதனையடுத்து, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்வதாக அறிவித்து, அவையில் இருந்து வெளியேறினர்.

Loading...