ETV Bharat / state

'விசில்' அடிக்க அழைக்கும் மயில்சாமி!

author img

By

Published : Mar 23, 2021, 3:26 PM IST

Updated : Mar 23, 2021, 3:33 PM IST

சென்னை: வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் மயில்சாமிக்கு விசில் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

whistle symbol
whistle symbol

நடிகர் மயில்சாமி தமிழ்த் திரைப்படங்களில் நகைச்சுவை, குணச்சித்திர வேடங்களில் நடித்துவருகிறார். அதிமுகவில் நட்சத்திரப் பேச்சாளராக இருந்த இவர் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு, கட்சி செயல்பாடுகளிலிருந்து மெள்ள மெள்ள வெளியேறினார். பின்னர் அவ்வப்போது தொலைக்காட்சி விவாதங்களில் மட்டும் அவருடைய கருத்துகளைப் பகிர்ந்துகொண்டுவந்தார்.

இதற்கிடையில் கரோனா பேரிடர் காலத்தில் தான் வசித்துவரும், விருகம்பாக்கம் தொகுதியில் மக்களுக்குப் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிவந்த இவர், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட வேட்புமனு தாக்கல்செய்திருந்தார்.

அதிமுகவிலிருந்து வெளியேறிய இவர் பிற கட்சியில் தன்னை இணைத்துக் கொள்ளாமல் சுயேச்சையாகவே போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார். இந்நிலையில், மயில்சாமிக்குத் தேர்தல் ஆணையம் விசில் சின்னம் ஒதுக்கீடு செய்துள்ளது.

இவர் தற்போது, விருகம்பாக்கம் தொகுதியில் அதிமுக சார்பில் ரவி, திமுக சார்பில் பிரபாகர் ராஜா, மக்கள் நீதி மய்யம் சார்பில் சிநேகன் ஆகியோரை எதிர்த்துப் போட்டியிடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Last Updated :Mar 23, 2021, 3:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.