ஆடையில் மறைத்து தங்க தகடுகள் கடத்திய பெண்கள்.. விமான நிலையத்தில் அகப்பட்டது எப்படி?
Updated on: Jan 25, 2023, 3:53 PM IST

ஆடையில் மறைத்து தங்க தகடுகள் கடத்திய பெண்கள்.. விமான நிலையத்தில் அகப்பட்டது எப்படி?
Updated on: Jan 25, 2023, 3:53 PM IST
இலங்கையில் இருந்து ஆடையில் மறைத்து ரூ.26 லட்சம் மதிப்பிலான 516 கிராம் தங்க தகடுகளை கடத்தி வந்த இரு பெண்களை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை: இலங்கையிலிருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை, சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது இலங்கையைச் சேர்ந்த 2 பெண் பயணிகள், சுற்றுலா விசாவில், இந்த விமானத்தில் வந்திருந்தனர்.
சுங்க அதிகாரிகளுக்கு இந்தப் பெண் பயணிகள் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவர்களை நிறுத்தி விசாரித்தனர். ஆனால் அவர்கள் சரிவர பதில் அளிக்கவில்லை. இதையடுத்து பெண் சுங்க அதிகாரிகள் 2 இலங்கை பெண் பயணிகளையும், தனி அறைக்கு அழைத்துச் சென்று, முழுமையாக பரிசோதித்த போது, அவர்களுடைய ஆடைகளுக்குள் மறைத்து, வைத்திருந்த பார்சல்களில், 516 கிராம் தங்கத் துண்டுகள் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.
மறைத்து வைத்து கடத்தப்பட்ட தங்கத்தின் சர்வதேச மதிப்பி 26 லட்சம் ரூபாயாகும். அதனைத் தொடர்ந்து இரு பெண்களையும் கைது செய்த அதிகாரிகள் தங்கத்தை கைப்பற்றி தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஜெயலலிதாவின் புடவைகள் உட்பட 29 பொருட்கள் ஏலம் - நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
