சென்னையில் முகக் கவசம் அணியாவிட்டால் 500 ரூபாய் அபராதம்
Updated on: Jul 5, 2022, 3:33 PM IST

சென்னையில் முகக் கவசம் அணியாவிட்டால் 500 ரூபாய் அபராதம்
Updated on: Jul 5, 2022, 3:33 PM IST
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் முகக் கவசம் அணியாவிட்டால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவருகிறது. அந்த வகையில் நேற்று (ஜூலை 4) சென்னையில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று அறிவித்தது.
அதோடு வணிக வளாகங்கள், திரையரங்குகள், அங்காடிகள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில், அதன் உரிமையாளர்கள் தங்களது வாடிக்கையாளர்களிடம் கரோனா நடவடிக்கைகளை பின்பற்ற வலியுறுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.
இந்த நிலையில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் முகக் கவசம் அணையாவிட்டால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் அபாராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே இத்திட்டம் அமல்படுத்தப்பட்டு, தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இப்போது மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பொதுக் குழுவுக்கு தடை: ஓபிஎஸ் மனு நாளை விசாரணை
