தமிழ்நாட்டில் புதிதாக 2,672 பேருக்கு கரோனா உறுதி

author img

By

Published : Jul 3, 2022, 8:46 PM IST

தமிழ்நாட்டில் புதிதாக 2,672 பேருக்கு கரோனா; சென்னையில் 1072 பேருக்கு பாதிப்பு..!

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 2,672 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மாலத்தீவில் இருந்து வந்த இரண்டு நபர்கள் உட்பட 2,672 நபர்களுக்கு மேலும் புதிதாக கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 14,504 என உயர்ந்துள்ளது.

பொது சுகாதாரத்துறை இயக்குநரகம் இன்று (ஜூலை 03) வெளியிட்டுள்ள புள்ளிவிபரம் தகவலின் படி, தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 32 ஆயிரத்து 793 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் தமிழ்நாட்டில் இருந்த 2,670 நபர்களுக்கும் மாலத்தீவில் இருந்து வந்த இரண்டு நபர்களுக்கும் என 2,672 நபர்களுக்கு மேலும் புதிதாக கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் தமிழ்நாட்டில் இதுவரை 6 கோடி 60 லட்சத்து 64 ஆயிரத்து 931 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறிவதற்கான ஆர்டிடிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் 34 லட்சத்து 82 ஆயிரத்து 775 நபர்கள் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பிற்கு உட்பட்டிருந்தனர் என்பது தெரியவந்தது.

அவர்களில் தற்பொழுது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 14,504 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.மேலும் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில் 1,487 பேர் குணமடைந்து உள்ளனர். இவர்களுடன் சேர்த்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 34 லட்சத்து 30 ஆயிரத்து 245 என உயர்ந்துள்ளது.

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் 1,072 பேருக்கும் செங்கல்பட்டில் 373 பேருக்கும் கோயம்புத்தூரில் 145 பேருக்கும் திருவள்ளூர் மாவட்டத்தில் 131 பேருக்கும் திருச்சி மாவட்டத்தில் 104 பேருக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தில் 83 பேருக்கும் காஞ்சிபுரத்தில் 81 பேருக்கும் திருநெல்வேலியில் 89 நபர்களுக்கும் தூத்துக்குடியில் 72 நபர்களுக்கும் என 2,672 பேருக்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது.

பரிசோதனை செய்யும் நோயாளிகளில் நோய் தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை தமிழ்நாட்டில் 7.6 சதவீதமாக கிடுகிடு என அதிகரித்து வருகிறது. மாநிலத்தில் அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டத்தில் 14 சதவீதம் என நோய் தொற்று பரவல் விகிதம் இருந்து வருகிறது. அதற்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 13.2 சதவீதம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 12.8 சதவீதமும் சென்னை மாவட்டத்தில் 11.3 சதவீதமும் கன்னியாகுமரி மாவட்டத்தில் 10.8% என அதிகரித்து வருகிறது.

அதே நேரத்தில் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் இறப்பு இல்லாமல் இருப்பதால் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை மட்டுமே அதிகரித்து வந்து கொண்டிருக்கின்றது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:நாடு முழுவதும் மேலும் 16,103 பேருக்கு கரோனா... 31 பேர் உயிரிழப்பு...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.