Nurses vacancies: 1743 செவிலியர் காலிப்பணியிடங்கள்

author img

By

Published : Jan 19, 2023, 4:03 PM IST

1743 செவிலியர் காலிப்பணியிடங்கள்

தமிழ்நாட்டில் 22 மாவட்டங்களில் பொதுச் சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து துறையின் கீழ் செயல்படும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள செவிலியர் மற்றும் இடைநிலை சுகாதார பணியாளர்களுக்கான 1743 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலிப்பணியிடங்கள்:

தென்காசி - 10

ராமநாதபுரம் - 57

சிவகங்கை - 41

தூத்துக்குடி - 42

விருதுநகர் - 13

நாமக்கல் - 210

மதுரை - 88

கிருஷ்ணகிரி - 172

திருப்பூர் - 126

கன்னியாகுமரி - 40

புதுக்கோட்டை - 114

தஞ்சாவூர் - 140

திருச்சி - 119

கோயம்புத்தூர் - 119

பெரம்பலூர் - 61

செங்கல்பட்டு - 35

திருப்பத்தூர் - 31

மயிலாடுதுறை - 101

திருவள்ளூர் - 78

கள்ளக்குறிச்சி - 54

நாகப்பட்டினம் - 69

வேலூர் - 23

கல்வித்தகுதி: DHS அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் GNM, B.Sc நர்சிங் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 50 வயதிற்குள் இருக்க வேண்டும். வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வு குறித்து அந்தந்த மாவட்ட பக்கங்களில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.

சம்பள விவரம்: தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மாதம் ரூ.18,000 சம்பளமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கரோனா காலத்தில் பணிபுரிந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும்முறை: விருப்பமுள்ளவர்கள் உரிய சுயசான்றொப்பம் இடப்பட்ட ஆவணங்களுடன் பூர்த்தி செய்த விண்ணப்ப படிவத்தை அந்தந்த மாவட்டங்களின் அதிகாரப்பூர்வ இணைய பக்கத்தில் உள்ள செவிலியர் காலிப்பணியிட அறிவிப்பில் உள்ள முகவரிக்கு குறிப்பிட்ட தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இதையும் படிங்க: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 4 ஆண்டுகளில் 4,312 பேர் கருக்கலைப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.