'வருமுன் காப்போம்' திட்டம்: 1,250 மருத்துவ முகாம்கள்... குழந்தைகளுக்கு தடுப்பூசி...

author img

By

Published : Oct 12, 2021, 8:55 AM IST

Updated : Oct 12, 2021, 3:08 PM IST

மருத்துவ முகாம்கள்  மருத்துவ முகாம்  தடுப்பூசி முகாம்  வருமுன் காப்போம் திட்டம்  கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம்  மா சுப்பிரமணியம்  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை  ma subramanian  medical camp  vaccination camp  Department of Medicine and Public Welfare

தமிழ்நாடு முழுவதும் இன்று கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் மூலம் ஆயிரத்து 250 மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளன என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கடந்த ஞாயிறு (அக்டோபர் 10) அன்று தமிழ்நாட்டின் பட இடங்களில் ஐந்தாம் கட்ட சிறப்புத் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் திண்டுக்கல், கரூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் நடைபெற்ற முகாமினை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வுசெய்தார்.

இதையடுத்து நேற்று (அக்டோபர் 11) காலை திருச்சியிலிருந்து விமானம் மூலம் சென்னை திரும்பிய மா. சுப்பிரமணியன் செய்தியாளரைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது, 'தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் 50 இடங்களில், கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் மூலம் ஆயிரத்து 250 மருத்துவ முகாம்கள், நாளை (அக்டோபர் 12) நடைபெறும்' எனத் தெரிவித்தார். மேலும் இம்முகாமானது காலை 9.30 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் எனவும் கூறினார். இதனிடையே இந்தியாவில் 2 முதல் 18 வயது வரையிலான சிறுவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கலாம் என்று இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்திற்கு நிபுணர்கள் குழு பரிந்துரை செய்துள்ளது. அதனடிப்படையில் விரைவில் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்படும் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தல்: வாக்கு எண்ணிக்கை இன்று தொடக்கம்

Last Updated :Oct 12, 2021, 3:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.