செங்கல்பட்டு கள்ளச்சாராயம் விவகாரம் - காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை
Published: May 22, 2023, 11:05 PM


செங்கல்பட்டு கள்ளச்சாராயம் விவகாரம் - காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை
Published: May 22, 2023, 11:05 PM
செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 8 பேர் உயிரிழந்த விவகாரத்தில் செய்யூர் காவல் ஆய்வாளர் மீதும் நடவடிக்கை பாய்ந்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்துள்ளது சித்தாமூர். சித்தாமூர் காவல் எல்லைக்கு உட்பட்டவை பேரம்பாக்கம் மற்றும் பெருங்கருணை கிராமங்கள். இந்த இரு கிராமங்களைச் சேர்ந்த எட்டு பேர், கள்ளச் சாராயம் குடித்து சில நாட்களுக்கு முன்னதாக உயிரிழந்தனர். இச்சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுதியது.
இதனையடுத்து காவல் துறையை சேர்ந்த சிலர் மீது நடவடிக்கை பாய்ந்தது. அந்த வகையில் கலால் மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசார் சிலர் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டுள்ளனர். ஆனால், இதில் பாரபட்சம் நிலவியதாக பொதுமக்களின் மத்தியில் சர்ச்சை எழும்பியது.
இதையும் படிங்க: காத்திருப்போர் பட்டியலில் மதுராந்தகம் டி.எஸ்.பி - பின்னணி என்ன?
அதன் பின்னர் மதுராந்தகம் காவல் துணைக் கண்காணிப்பாளர் மணிமேகலை காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். ஆனாலும், கள்ளச்சாராயம் விற்றதாகக் கைது செய்யப்பட்டவர்கள் வசித்த ஓதியூர், பனையூர் மற்றும் செய்யூர் ஆகிய பகுதிகளில் உள்ள காவல் நிலைய அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை என்ற குமுறல் அப்பகுதி மக்களிடையே பரவலாக காணப்பட்டது.
இது குறித்து நமது ஈடிவி பாரத் தமிழ் விரிவான செய்தி வெளியிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து நமது செய்தியின் எதிரொலியாக தற்போது செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் காவல் நிலைய ஆய்வாளர் ஞானசேகரன் பணியிலிருந்து விலக்கப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: சட்டவிரோத மது விற்பனை செய்த 52 டாஸ்மாக் பார்கள் மீது நடவடிக்கை - திருச்சி மாநகர ஆணையர் எச்சரிக்கை!
இதையும் படிங்க: வாட்ஸ்அப்பில் எடிட் ஆப்ஷன் - இனி 15 நிமிடங்களில் அனுப்பிய மெஷேஜில் திருத்திக்கொள்ளலாம்!
