வெள்ள பாதிப்பு, நிவாரணப் பணிகள்: மத்திய குழுவிடம் விளக்கிய செங்கை ஆட்சியர்

author img

By

Published : Nov 24, 2021, 11:15 AM IST

Updated : Nov 24, 2021, 4:48 PM IST

செங்கல்பட்டு மாவட்டத்தில் மத்தியக் குழு ஆய்வு

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து, ஒன்றிய உள் துறை இணைச் செயலர் ராஜீவ் சர்மா தலைமையிலான மத்திய குழுவினர் ஆய்வுமேற்கொண்டனர்.

செங்கல்பட்டு: கடந்த சில நாள்களாகத் தொடர்ந்து பெய்த வடகிழக்குப் பருவமழையால் செங்கல்பட்டு மாவட்டத்தில் பயிர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், உள் துறை இணைச் செயலர் ராஜீவ் சர்மா, கூட்டுறவு - உழவர் நலன் இயக்குநர் விஜய் ராஜ் மோகன் உள்ளிட்ட அலுவலர்கள் அடங்கிய மத்திய குழுவினர், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று வெள்ள பாதிப்புகளைப் பார்வையிட்டனர்.

மத்திய குழு ஆய்வு

மேலும் வெள்ள பாதிப்புகள் குறித்த, புகைப்படங்கள், காணொலிப் பதிவுகளையும் பார்வையிட்டனர். தொடர்ந்து மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும், தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் நிவாரணப் பணிகள் குறித்தும் ஆட்சியர் ரகுநாத் மத்திய குழுவிடம் விளக்கிக் கூறினார்.

இதையும் படிங்க:ஜெயலலிதா போயஸ் தோட்ட இல்ல விவகாரத்தில் இன்று தீர்ப்பு!

Last Updated :Nov 24, 2021, 4:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.