'நீட் தேர்வுக்கு எதிராக வலுவான போராட்டத்தை எழுப்ப வேண்டும்'

author img

By

Published : Jun 6, 2019, 4:30 PM IST

சென்னை: நீட் தேர்வுக்கு எதிராக வலுவான போராட்டத்தை எழுப்ப வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கோரிக்கைவிடுத்துள்ளார்.

இது குறித்து, பாலகிருஷ்ணன் சென்னையிலுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்திக்கையில், ‘நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. எதிர்பார்த்ததை போல் குறைவான தமிழ்நாடு மாணவர்களே தேர்ச்சி அடைந்துள்ளனர். தேர்வில் தோல்வி அடைந்ததால் இரு மாணவிகள் உயிரிழந்துள்ளனர்.

இது மத்திய அசின் மருத்துவக் கல்வி கொள்கையால் நடத்தப்பட்ட படுகொலை. தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் தற்கொலை போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடாமல் நீட் தேர்வுக்கு எதிராக வலுவான போராட்டத்தை எழுப்ப வேண்டும்.

தேர்தலுக்கு முன் சேலம் எட்டு வழிச்சாலை, ஹைட்ரோகார்பன் திட்டம் உள்ளிட்டவற்றைப் பற்றிப் பேசாத அரசு தற்போது அத்திட்டங்களைத் தீவிரமாக செய்துவருகிறது. இதனை எதிர்த்து ஜூன் 5ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டெல்டா மாவட்டங்களில் சைக்கிள் பேரணி நடத்தப்படும்.

மேலும், ஏழு தமிழர் விடுதலைப் பற்றி நாடாளுமன்றத்தில் பேச முடியாது. அது மாநில அரசின் பிரச்னை. அது சம்பந்தமாக சட்டப்பேரவையில் அரசுதான் குரல் கொடுக்க வேண்டும். அரசு கொடுத்த தீர்மானத்தின் மீது ஆளுநர் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

வேளாண் கல்லூரி மாணவிகளை எரித்த அதிமுகவினரின் விடுதலை தீர்மானத்தில் கையெழுத்திட்ட ஆளுநர் ஏழு தமிழர் விடுதலையில் கையெழுத்திட மறுக்கிறார். எனவே அரசுதான் மீண்டும் ஒரு தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அழுத்தம் தர வேண்டும்' எனத் தெரிவித்தார்.

சென்னையிலுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைமை அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், " நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. எதிர்பார்த்ததை போல் குறைவான தமிழக மாணவர்களே தேர்ச்சி அடைந்துள்ளனர். தேர்வில் தோல்வி அடைந்ததால் இரு மாணவிகள் உயிரிழந்துள்ளனர். இது மத்திய அசின் மருத்துவக் கல்வி கொள்கையால் நடத்தப்பட்ட படுகொலை. தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் தற்கொலை போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடாமல் நீட் தேர்வுக்கு எதிராக வலுவான போராட்டத்தை எழுப்ப வேண்டும்.

தமிழகத்தில் குடிநீர் பற்றாக்குறைக்கு நடவடிக்கை எடுக்காமல் பள்ளிக்கள் திறக்கப்பட்டுள்ளது. தண்ணீர் இல்லாத காரணத்தால் மாணவர்கள் திரும்ப வீட்டுக்கு அனுப்பப்படுகின்றனர். இதற்கு அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சில பாட புத்தகங்களை வழங்காமல் போன ஆண்டின் புத்தகத்தை ஜெராக்ஸ் எடுத்துக்கொள்ளுமாறு கூறுகின்றனர். மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பாட புத்தகங்களை உடனடியாக வழங்க வேண்டும்.

தேர்தலுக்கு முன் சேலம் 8 வழிச்சாலை, ஹைட்ரோ கார்ப்பன் திட்டம் செயல்படுத்துவதை பற்றி பேசாத அரசு தற்போது அத்திட்டங்களை தீவிரமாக செய்து வருகிறது. இதனை எதிர்த்து ஜீன் 5 முதல் 10 தேதி வரை சைக்கிள் பேரணி நடதௌதுவது என்று முடிவெடுக்கப்பட்டு நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டெல்டா மாவட்டங்களில் சைக்கிள் பேரணி தொடங்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தில் அனைத்து கட்சிகளையும் பங்கெடுக்க செய்து 8 வழிச்சாலை மற்றும் ஹைட்ரோ கார்ப்பன் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்போம்.

மும்மொழி கல்வி திடௌடத்தில் திருத்தம் செய்யப்பட்டிருந்தாலும் அது இந்தி மொழியின் திணிப்பாகவே கருதப்டுகிறது. இரு மொழி கல்வி திட்டத்தை மாற்றி இந்தி மொழியை பின்வாசல் வழியாக திணிப்பது போன்ற திருத்தமே செய்யப்பட்டுள்ளது. இதை செய்கின்ற பா.ஜ.க. அரசுடன் எடப்பாடி அசு தேர்தல் உறவுகளை வைத்துக்கொண்டு மெளனம் காக்கிறது.

கடந்த வருடம் காவிரியில் திறந்து விடப்பட்ட தண்ணீர் வீணாக கடலில் கலந்தது. அவற்றை சேமித்து வைக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டு வருகிறது. இதற்கு ஏரி, குளங்களை தூர்வாரி சீர்ப்படுத்தி தண்ணீரை சேமிக்க மாநில அரசு தவறி வருகிறது. மக்களுக்கு தேவையான தண்ணீரை அசு உடனடியாக வழங்க வேண்டும். ஏரி, குளங்களை ஆழ்படுத்தி, அகலப்படுத்தி மழை நீரை சேமிக்க வேண்டும். இவை எல்லாவற்றையும் மேற்கொள்ள 100 நாள் வேலைத்திட்டம் சிறப்பான ஒரு திட்டம். எனவே அரசு அதனை நெறிபடுத்தி மீண்டும் தொடர வேண்டும்.

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 39 வெளி மாநிலத்தவர் துணை பொறியாளர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழக இளைஞர்கள் வேலைக்கு தீண்டாடும் போது அரசு வேலைவாய்ப்பில் வெளி மாநிலத்தவரை நிரப்பக்கூடாது. இதற்கு தமிழக அரசு 2016 இல் கொண்டுவந்த சட்ட திருத்தம் தான் காரணம். எனவே அதனை ரத்து செய்ய வேண்டும்.

நீட் தேர்வுக்கு காங்கிரஸ், தி.மு.க. ஆட்சியில் தான் ஒப்புதல் அளிக்கப்பட்டது என்று கூறுகிறார்கள். அவர்கள் ஆடௌசி காலத்தில் அது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ஆனால் பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க ஆட்யில் தான் அது செச்சல்படுத்தப்பட்டது. அந்தந்த சூழ்நிலைக்கு ஏற்ப திட்டங்களை ஆதரித்திருக்கலாம். ஆனால் தவறு என்று தெரிந்தவுடன் அதனை தடுத்து நிறுத்த வேண்டும். அதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்.

நாடாளுமன்றம் இன்னும் சில தினங்களில் கூடவுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள 38 தமிழக எம்.பி கள் ஓரணியில் நின்று ஹைட்ரோ கார்ப்பன், 8 வழிச்சாலை போன்ற திட்டங்களுக்கு எதிராக குரல் கொடுப்பார்கள்.

7 தமிழர் விடுதலைப் பற்றி நாடாளுமன்றத்தில் பேச முடியாது. அது மாநில அரசின் பிரச்னை. அது சம்பந்தமாக சட்டமன்றத்தில் அரசு தான் குரல் கொடுக்க வேண்டும். அரசு கொடுத்த தீர்மானத்தின் மீது ஆளுநர் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. வேளாண் கல்லூரி மாணவிகளை எரித்த அ.தி.மு.க. வினரின் விடுதலை தீர்மானத்தில் கையெழுத்திட்ட ஆளுநர் 7 தமிழர் விடுதலையில் கையெழுத்திட மறுக்கிறார். எனவே அரசு தான் மீண்டும் ஒரு தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அழுத்தம் தர வேண்டும்.

தமிழை மற்ற மாநிலங்களில் விருப்ப பாடமாக தேர்வு செய்ய வலியுறுத்தி பிரதமருக்கு ட்விட் செய்ததன் மூலம் முதல்வர் மும்மொழி திட்டத்துக்கு மறைமுகமாக ஆதரவு தெரிவித்து போல் தோன்றுகிறது. தமிழை வேறு வழிகளில் வலியுறுத்தலாம். மும்மொழி கொள்கை குறித்து அண்ணா தி.மு.க வின் நிலைப்பாடு என்ன என்பதே கேள்வி" என்று தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.