காலை 7 மணி செய்தி சுருக்கம் TOP 10 NEWS @ 7 AM

author img

By

Published : Nov 11, 2021, 7:05 AM IST

top ten news at 7 am  top ten news  top news  top ten  latest news  tamil nadu news  tamilnadu latest news  morning news  news update  today news  காலை செய்திகள்  முக்கியச் செய்திகள்  இன்றைய செய்திகள்  இன்றைய முக்கியச் செய்திகள்  தமிழ்நாடு செய்திகள்  செய்திச் சுருக்கம்  ஏழு மணி செய்திகள்

ஈடிவி பாரத்தின் காலை 7 மணி செய்தி சுருக்கம்

1. கனமழை எச்சரிக்கை: மக்களுக்குத் தேவையான உணவு தயார் - கே.என். நேரு

சென்னையில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உணவுகளை தயார் நிலையில் வைக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார்.

2. காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நாளை மாலை கரையைக் கடக்கக்கூடும் - வானிலை ஆய்வு மையம்

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நாளை மாலை கரையைக் கடக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

3. 'அதிமுகவில் உரிமை கோர சசிகலாவிற்கு முகாந்திரம் இல்லை'

அதிமுகவில் உரிமை கோர சசிகலாவிற்கு எந்த அடிப்படை முகாந்திரமும் இல்லை என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் சார்பில் சென்னை மாநகர உரிமையியல் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4. காவல் நிலையங்களில் கோவில்கள் அகற்ற கோரிய வழக்கு தள்ளுபடி

தமிழ்நாட்டில் உள்ள காவல் நிலையங்களில் சிலைகள், கோவில்களை அகற்றக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

5. தேவர் குருபூஜை வழக்கு: முன்ஜாமீன் கேட்ட பேராசிரியர் - ஆதாரம் கேட்ட நீதிமன்றம்

தேவர் குருபூஜையில் வாகனம் மீது நடனமாடிய வழக்கில் பேராசிரியரின் கல்லூரி வருகை பதிவேடு விவரத்தை தாக்கல் செய்யுமாறு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

6. ஹாக்கி கிளப்களில் ஒருங்கிணைப்பாளர் தேர்வு தொடர்பான வழக்கு - தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவு

தமிழ்நாட்டில் உள்ள ஹாக்கி கிளப்களில் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தி ஒருங்கிணைப்பாளர்களை தேர்வு செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

7. ஒரேநாளில் ரூ. 46 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

குவைத், கொழும்பு, சார்ஜா ஆகிய நாடுகளில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்த ரூ. 46 லட்சத்தி 15 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ தங்கம் பறிமுதல்

8. அட்லீ - ஷாருக்கான் படத்திலிருந்து விலகினாரா நயன்தாரா?

ஷாருக்கான் - நயன்தாரா நடித்துவரும் படத்தின் ஷூட்டிங் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் லீக்காகியுள்ளது.

9. 'போலா சங்கர்' சிரஞ்சீவியுடன் மீண்டும் இணைந்த தமன்னா!

'வேதாளம்' தெலுங்கு ரீமேக்கான 'போலா சங்கர்' படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்க தமன்னா ஒப்பந்தமாகியுள்ளார்.

10. 'ஸ்குவிட் கேம்' இரண்டாம் பாகம் வருவது நிச்சயம் - இயக்குநர் அறிவிப்பு!

'ஸ்குவிட் கேம்' வெப் சீரிஸின் இரண்டாம் பாகம் குறித்து திட்டமிட்டு வருவதாக அதன் இயக்குநர் ஹ்வாங் டோங்-ஹியூக் தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.