டோக்கியோ ஒலிம்பிக் - பதக்கம் இன்றி வெளியேறினார் ஜோகோவிச்

author img

By

Published : Jul 31, 2021, 3:27 PM IST

Updated : Jul 31, 2021, 3:33 PM IST

நோவக் ஜோகோவிச்,  Pablo Busta,  Djokovic loses bronze medal match to Pablo Busta, Djokovic

ஓலிம்பிக் டென்னிஸ் போட்டியில் உலகின் முதல்நிலை வீரரான செர்பியாவின் ஜோகோவிச் ஸ்பெயின் நாட்டு வீரரிடம் தோல்வியடைந்து பதக்கம் இன்றி வெளியேறினார்.

டோக்கியோ: டென்னிஸ் தரவரிசையில் உலகின் முதல்நிலை வீரரான செர்பியா நாட்டைச் சேர்ந்த நோவக் ஜோகோவிச், இந்தாண்டு நடைபெற்ற மூன்று கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று அசைக்க முடியாத வீரராக விளங்கி வந்தார்.

டோக்கியோ ஒலிம்பிக்கின் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் நேற்று (ஜூலை 30) நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் ஜெர்மனி வீரர் அலெக்ஸாண்டரிடம் தோல்வியடைந்து அதிர்ச்சியளித்தார்.

இதையடுத்து, வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில், ஸ்பெயின் நாட்டு வீரர் பப்லோ கரேனோ புஸ்டா உடன் ஜோகோவிச் இன்று (ஜூலை 31) மோதினார். முதல் செட்டை இழந்த ஜோகோவிச், இரண்டாவது செட்டை 7-6 என்ற கணக்கில் வென்று ஆட்டத்தை சமன் செய்தார்.

ஒலிம்பிக்கும் ஜோகோவிச்சும்

அதன்பின் மூன்றாவது செட்டை 6-3 புள்ளிகளில் இழந்த ஜோகோவிச், தொடர்ந்து மூன்றாவது முறையாக ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லாமல் வெளியேறினார்.

ஜோகோவிச் கடைசியாக 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்று இருந்தார். 2012 லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டி வரை முன்னேறிய ஜோகோவிச், 2016 ரியோ ஒலிம்பிக்கில் முதல் சுற்றிலேயே வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: டோக்கியோ ஒலிம்பிக் - மகளிர் ஹாக்கியில் இந்தியா வெற்றி

Last Updated :Jul 31, 2021, 3:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.