டோக்கியோ : டோக்கியோ ஒலிம்பிக்கில் 7ஆவது நாளான இன்று ஹாக்கியில் இந்தியா- அர்ஜென்டினா அணிகள் மோதின.
இந்தப் போட்டியின் முதல் பகுதியில் இந்திய அணி சொதப்பியது. ஆட்டத்தின் 23ஆவது நிமிடத்தில் கோல் அடிக்க கிடைத்த வாய்ப்பை கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் தவறவிட்டார். அடுத்த சில நிமிடங்களும் இந்திய வீரர்கள் மந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இந்திய வீரர்களின் கோல் போடும் முயற்சியை தடுப்பாட்டம் மூலம் அர்ஜென்டினா வீரர்கள் முறியடித்தனர். இந்நிலையில் ஆட்டத்தின் 43ஆவது நிமிடத்தில் அர்ஜென்டினாவின் கேசெல்லா ஷூத் பெனால்டியை கோலாக மாற்றினார். இதனால், ஸ்கோர்கார்டு 1-1 என்ற நிலையில் இருந்தது.
இதையடுத்து, விவேக் பிரசாத்தும் அர்ஜென்டினாவுக்கு எதிராக ஒரு கோல் அடித்தார். கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் அதைப் பின்பற்றி மற்றொரு கோல் அடித்தார்.
இதையடுத்து 3-1 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை இந்திய அணி வீழ்த்தியது. ஹாக்கியில் 1980 ரோம் ஒலிம்பிக் முதல் இந்தியாவின் பதக்க தாகம் தொடர்கிறது. 2012 லண்டன் ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி 12ஆவது இடத்தை பிடித்தது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க : Tokyo Olympics: காலிறுதிக்கு முன்னேறினார் பி.வி. சிந்து!