டோக்கியோ ஒலிம்பிக் 14ஆவது நாள்: எந்த இடத்தில் இருக்கிறது இந்தியா?

author img

By

Published : Aug 6, 2021, 6:31 AM IST

டோக்கியோ ஒலிம்பிக் பதக்கப் பட்டியல்

டோக்கியோ ஒலிம்பிக் 2020இல் 14ஆம் நாள் போட்டியின் முடிவில், இந்தியா 65ஆவது இடத்தில் உள்ளது.

டோக்கியோ: 2020 ஒலிம்பிக் போட்டிகள் தற்போது நடைபெற்றுவருகின்றன. போட்டியின் 14ஆம் நாளான நேற்று (ஆக. 5) இந்தியா ஹாக்கியில் ஒரு வெண்கலமும், மல்யுத்தத்தில் வெள்ளியையும் என இரண்டு பதக்கங்களை வென்றது.

தற்போது, பதக்கப் பட்டியலில், சீனா 34 தங்கம், 24 வெள்ளி, 16 வெண்கலம் என 74 பதக்கங்களுடன் முதலிடத்திலும், அமெரிக்கா 29 தங்கம், 35 வெள்ளி, 27 வெண்கலம் என 91 பதக்கங்களை வென்று இரண்டாம் இடத்திலும் உள்ளன.

ஒலிம்பிக் போட்டியை நடத்தும் நாடான ஜப்பான் 22 தங்கம், 10 வெள்ளி, 14 வெண்கலம் என 46 பதக்கங்களுடன் மூன்றாம் இடத்தில் உள்ளது. இந்தியா 2 வெள்ளி, 3 வெண்கலம் என ஐந்து பதக்கங்களுடன் 65ஆவது இடத்தில் உள்ளது.

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

டோக்கியோ ஒலிம்பிக் பதக்கப் பட்டியல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.