ETV Bharat / sports

அர்ஜென்டினாவை வீழ்த்தி சாதனை படைக்குமா இந்திய மகளிர் ஹாக்கி அணி!

author img

By

Published : Aug 3, 2021, 9:05 PM IST

டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் இந்திய ஹாக்கி அணி முதன்முறையாக அரையிறுதிக்குச் சென்றுள்ள நிலையில், நாளைய போட்டி இந்திய ஹாக்கி வரலாற்றில் சிறப்புமிக்க போட்டி என்றாலும் தகும்.

இந்திய மகளிர் ஹாக்கி அணி
இந்திய மகளிர் ஹாக்கி அணி

டோக்கியோ: இந்திய மகளிர் ஹாக்கி அணி அரையிறுதிக்கு முன்னேறி ஏற்கெனவே வரலாறு படைத்துள்ளது. தகுதிச்சுற்று ஆட்டங்களில் முதலில் சொதப்பி வந்த இந்திய மகளிர் அணி, அயர்லாந்து, ஜப்பான் அணியை வீழ்த்தி முதல் முறையாக காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. பின்னர், காலிறுதியில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை மண்ணைக் கவ்வ வைத்தது.

பதக்கத்தை நோக்கி இந்தியா

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான வெற்றி எளிதாக கிடைத்த வெற்றி இல்லை. இந்திய அணி கோல் கீப்பரான சவிதா தூணாக இருந்து ஆஸ்திரேலியாவின் அத்தனை பெனால்டி வாய்ப்புகளையும் தடுத்து வெற்றிக்கு பெரும் பங்காற்றினார். குர்ஜித் கவுர், தீப் க்ரேஸ் எக்கா, மோனிகா மாலிக், உதித்தா ஆகியோரின் தொடர் பங்களிப்புதான் இந்திய அணியின் இத்தனை தூர பயணத்திற்கு வழிவகுத்தது.

இந்நிலையில் இந்திய அணி, அரையிறுதியில் அர்ஜென்டினா அணியை நாளை (ஆக. 4) சந்திக்க இருக்கின்றனர். அர்ஜென்டினா அணி 2000 சிட்னி ஒலிம்பிக், 2012 லண்டன் ஒலிம்பிக் இரண்டிலும் வெள்ளி வென்றிருக்கிறது. இந்த ஒலிம்பிக் தொடருக்கு ஒரு வருடம் முன்னர் இந்திய மகளிர் அணி, அர்ஜென்டினாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது.

இதுவரை அர்ஜென்டிவுடன்...

அங்கு மொத்தம் 7 போட்டிகளில் இந்திய அணி விளையாடியது. அர்ஜென்டினா இளம் அணியினர் உடனான முதல் இரண்டு போட்டிகளை இந்திய அணி டிரா செய்தது. அடுத்த இரண்டு போட்டிகளை அர்ஜென்டினா 'பி' அணியுடன் மோதி, இரண்டிலும் தோல்வியுற்றது.

மீதமுள்ள மூன்று போட்டிகளில் அர்ஜென்டின சீனியர் அணியுடன் மோதியது இந்தியா. அதில் ஒரு போட்டி டிரா, மற்ற இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவி இருந்தது. இதற்கு முன் இந்தியா அர்ஜென்டினாவுக்கு எதிராக பல தோல்விகளைச் சந்தித்திருந்தாலும், ஒலிம்பிக் போட்டி வேறு என்பதை இந்தியா-ஆஸ்திரேலியா போட்டி நமக்கு உணர்த்தியது.

மகளிர் ஹாக்கி: நாளைய (ஆகஸ்ட் 4) ஆட்டம் - இந்தியா vs அர்ஜென்டினா - மாலை 3.30

இதையும் படிங்க: EXCLUSIVE: ஹாக்கியை ஊக்கப்படுத்துங்கள் - இந்திய வீராங்கனை மோனிகா மாலிக்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.