PARALYMPIC CANOE SPRINT: இறுதிப்போட்டியில் பிராச்சி யாதவ் ஏமாற்றம்!

author img

By

Published : Sep 3, 2021, 2:01 PM IST

Canoeist Prachi Yadav, பிராச்சி யாதவ்

பாரா ஒலிம்பிக் மகளிர் துடுப்பு படகுப்போட்டியில் இந்திய வீராங்கனை பிராச்சி யாதவ் இறுதிப்போட்டியில் கடைசி இடம் பிடித்து பதக்கம் வெல்லாமல் தோல்வியடைந்துள்ளார்.

டோக்கியோ: மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் பாரா ஒலிம்பிக் தொடர் ஆகஸ்ட் 24ஆம் தேதி தொடங்கியது. வரும் 5ஆம் தேதிவரை நடைபெறும் இத்தொடரில், இந்தியா சார்பில் மொத்தம் 54 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில், பாரா துடுப்பு படகுப்போட்டியின் மகளிர் ஒற்றையர் 200 மீட்டர் (விஎல்-2) பிரிவு இறுதிப்போட்டி இன்று (செப்.03) நடைபெற்றது. அதில், இந்தியா சார்பாக பிராச்சி யாதவ் உள்பட மொத்தம் எட்டு பேர் பங்கேற்றனர்.

10 வினாடிகள் வித்தியாசம்

இப்போட்டியில், ஒரு நிமிடம் 7.329 வினாடிகளில் இலக்கைக் கடந்து எட்டவாது இடத்தை பிராச்சி பிடித்தார். இங்கிலாந்து வீராங்கனை எம்மா விக்ஸ் (Emma Wiggs) 57.028 வினாடிகளில் இலக்கை கடந்து தங்கப் பதக்கம் வென்றார். எம்மா விக்ஸுக்கும், பிராச்சி யாதவிற்கும் 10 வினாடிகளே வித்தியாசம் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, நேற்று (செப்.02) காலிறுதிச்சுற்றில் நான்காவது இடத்தைப் பிடித்து பிராச்சி அரையிறுதிக்கு முன்னேறினார். இதையடுத்து, இன்று காலை நடைபெற்ற அரையிறுதியில், ஒரு நிமிடம் 7.397 வினாடிகளில் கடந்து மூன்றாமிடம் பெற்றுதான் இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருந்தார்.

  • Good Morning news. #IND Prachi Yadav storms into the FINAL of Women’s Single 200m VL2 by finishing 3rd in the Semifinal with timing of 1:07.397 #ParaCanoeing

    She will compete in the final at 7:32 am today.

    — Doordarshan Sports (@ddsportschannel) September 3, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

முதல் இந்தியர்

இப்போட்டி, கடந்த 2016 ரியோ பாரா ஒலிம்பிக்கில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதனால், பாரா துடுப்பு படகுப்போட்டிகளில் பங்கேற்ற முதல் இந்தியர் பிராச்சி யாதவ் என்பது கவனிக்கத்தக்கது.

ஆறு வயதான பிராச்சி யாதவ், மத்தியப் பிரதேசம் மாநிலம், போபால் நகரத்தை சேர்ந்தவர். அவர், இரண்டு கால்கள் செயலிழப்பால் பாதிக்கப்பட்டவர்.

முதலில், பாரா நீச்சல் போட்டிகளில் பங்கேற்ற பிராச்சி, தனது பயிற்சியாளரின் அறிவுரைப்படி பாரா துடுப்பு படகுப்போட்டியை கையிலெடுத்துக்கொண்டார். பல தடைகளைத் தாண்டி இந்த போட்டியில் இறுதிச்சுற்று வரை பிராச்சி முன்னேறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: வெண்கலம் வென்றார் அவனி லெகாரா; மேலும் ஒரு வரலாற்று சாதனை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.