T20 WC: பீர் ஊற்ற வேண்டிய இடமாடா அது... ஆஸி., வீரர்கள் செய்த காரியம்!

author img

By

Published : Nov 15, 2021, 7:28 PM IST

Updated : Nov 15, 2021, 8:07 PM IST

ஆஸி வீரர்கள் செய்த காரியம்

டி20 உலகக்கோப்பையை முதல் முறையாக வென்ற மகிழ்ச்சியில் திக்குமுக்காடிய ஆஸ்திரேலிய வீரர்கள் பீர்-ஐ காலணிக்குள் (Shoe) ஊற்றி குடித்த காணொலி காட்சிகள் வெளியாகியுள்ளன.

துபாய்: ஐசிசி 7ஆவது டி20 உலகக்கோப்பை தொடர் ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த அக்டோபர் 17ஆம் தேதி தொடங்கியது. தகுதிச்சுற்றுகள், சூப்பர் - 12 சுற்றுகள் முடிவில் இங்கிலாந்து, ஆஸ்திரலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் அரையிறுதிச் சுற்றுக்கு தகுதிபெற்றன.

இதையடுத்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. நேற்று (நவ. 14) நடைபெற்ற இறுதிப்போட்டியில், நியூசிலாந்து அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா தனது முதல் டி20 உலகக்கோப்பையை வென்றது.

2015 ஒருநாள் உலகக்கோப்பைக்கு பிறகு, ஆஸ்திரேலியா அணி வெல்லும் முதல் ஐசிசி கோப்பை இது என்பதால் வீரர்கள் பெரும் கொண்டாட்ட மனநிலையில் இருந்தனர். டிரஸ்ஸிங் ரூமில் ஆட்டம்பாட்டம் என கொண்டாடத்தில் ஈடுபட ஆஸ்திரேலியா வீரர்கள் அடித்த லூட்டிகளுக்கு எல்லையே இல்லை.

கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக ஆஸ்திரேலிய வீரர்களான மேத்யூ வேட், மார்க்வேஸ் ஸ்டாய்னிஸ் ஆகியோர் பீரை காலணிக்குள் (Shoe) ஊற்றி குடித்த தங்களின் வெற்றிக் களிப்பில் வெளிக்காட்டினர். அந்த காணொலி காட்சிகள் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றன.

இதையும் படிங்க: T20 World Cup 2021 Final: நியூசிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி!

Last Updated :Nov 15, 2021, 8:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.