MI vs SRH: மயங்க் அகர்வால் அதிரடி - மும்பை அணிக்கு 201 ரன்கள் இலக்கு!

author img

By

Published : May 21, 2023, 3:24 PM IST

Updated : May 21, 2023, 5:36 PM IST

IPL

ஐபிஎல் லீக் ஆட்டத்தில் மும்பை அணிக்கு, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 201 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

மும்பை: 16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்றுடன் லீக் ஆட்டங்கள் நிறைவடைகின்றன. 69வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி சன்ரைசர்ஸ் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக விவ்ராந்த் சர்மா, மயங்க் அகர்வால் ஆகியோர் களம் இறங்கினர். இருவரும் அதிரடியாக விளையாடி அரைசதம் விளாசினர். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் மும்பை பந்துவீச்சாளர்கள் திணறினர். 69 ரன்கள் (9 பவுண்டரி, 2 சிக்ஸர்) எடுத்திருந்த போது விவ்ராந்த் சர்மா ஆட்டமிழந்தார். தொடக்க ஜோடி முதல் விக்கெட்டுக்கு 140 ரன்களை சேர்த்தது.

கிளாசன் 18, பிலிப்ஸ் 1 ரன்னில் ஆட்டமிழந்தனர். அதிரடியாக விளையாடிய மயங்க் அகர்வால் 83 ரன்களில் (8 பவுண்டரி, 4 சிக்ஸர்கள்) ஆட்டமிழந்தார். ஹேரி ப்ரூக் டக் அவுட்டாகி ஏமாற்றினார். 20 ஓவர்கள் முடிவில் சன்ரைசர்ஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் எடுத்தது. கேப்டன் மார்க்ரம் 13, சன்வீர் சிங் 4 ரன்களுடன் களத்தில் இருந்தனர். மும்பை அணியின் பந்துவீச்சை பொறுத்தவரை மத்வால் 4 விக்கெட்களும், ஜோர்டன் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையும் படிங்க: IPL 2023: பிளே ஆஃப் சுற்று... 4வது இடம் யாருக்கு? பெங்களூரு, மும்பை தோற்றால் என்ன நடக்கும்?

Last Updated :May 21, 2023, 5:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.