பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா சென்னை?

author img

By

Published : Apr 17, 2019, 4:20 PM IST

ஹைதராபாத்: ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் சென்னை அணி, ஹைதராபாத் அணியுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

12ஆவது ஐபிஎல் தொடரின் 33ஆவது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது. இந்தத் தொடரில் மற்ற 7 அணிகளை விட சென்னை அணி அதிகமான புள்ளிகளை பெற்றுள்ளது. விளையாடிய 8 போட்டிகளில் 7 வெற்றி, ஒரு தோல்வி என 14 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

ஹைதராபாத்தின் ராஜிவ் காந்தி மைதானத்தில் இன்று நடைபெறவுள்ள ஆட்டத்தில் சென்னை அணி வெற்றிபெற்றால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும். அதேசமயம், தொடரின் தொடக்கத்தில் சிறப்பாக விளையாடிய ஹைதராபாத் அணி, கடைசியாக விளையாடிய மூன்று போட்டிகளிலும் படுதோல்வியே அடைந்தது. அதில், சொந்த மண்ணில் மட்டுமே இரண்டு போட்டிகளில் ஹைதராபாத் அணி வீழ்ந்தது. (மும்பை மற்றும் டெல்லி அணிக்கு எதிராக)

இதனால் ஹைதராபாத் அணி ஆடிய 7 போட்டிகளில் மூன்று வெற்றி, நான்கு தோல்வி என 6 புள்ளிகளை மட்டுமே பெற்று 6 ஆவது இடத்தில் உள்ளது.

தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்குமா ஹைதராபாத்:

தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் தோல்வியுற்றதால், ஹைதராபாத் அணி, இன்றைய போட்டியில் சென்னை அணியை வீழ்த்தி மீண்டும் வெற்றிபாதைக்கு திரும்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது. ஹைதராபாத் அணியை பொறுத்த வரையில், பவுலிங்கில் அந்த அணிக்கு எந்த குறையும் இல்லை. ரஷித் கான், புவனேஷ்வர் குமார், சந்தீப் ஷர்மா, சித்தார்த் கவுல், கலீல் அகமது போன்ற பந்துவீச்சாளர்கள் எதிரணியினர் அதிகமான ரன்களை அடிக்காமல் கட்டுப்படுத்துகின்றனர். ஆனால், ஆட்டத்தை நிலையாக எடுத்து செல்லும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்தான் அந்த அணியில் இல்லை.

Warner
வார்னர்

குறிப்பாக, தொடக்க வீரர்களான வார்னர் - பெயர்ஸ்டோவ் ஆகியோரை நம்பியே ஹைதராபாத் அணியின் பேட்டிங் உள்ளது. இவர்கள் ஆட்டமிழந்தால் அந்த அணியின் பேட்டிங் அகல பாதாளத்துக்கு வீழ்ந்தது. குறிப்பாக, டெல்லி அணிக்கு எதிராக 156 ரன் இலக்குடன் ஆடிய ஹைதராபாத் அணி ஒருகட்டத்தில் 101 ரன்களை எடுத்து இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்தது. அதன்பின் அந்த அணி 15 ரன்களுக்கு தங்களது 8 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

அதனால், இன்றைய போட்டியில் அனுபவம் வாய்ந்த வீரர்களான மணிஷ் பாண்டே, யூசஃப் பதான் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கலாம் என கூறப்படுகிறது.

சென்னை அணியின் ஆதிக்கம் தொடருமா:

சென்னை அணியை பொறுத்த வரையில், ஒரு வீரர் சொதப்பினால் அணியில் இருக்கும் மற்ற வீரர்கள் நிலைத்து விளையாடி அணியை வெற்றிபெற செய்கின்றனர். கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியின் மூலம் மீண்டும் ரெய்னா ஃபார்முக்கு வந்துள்ளது அந்த அணியின் டாப் ஆர்டர் பேட்டிங்கை பலப்படுத்தியுள்ளது. பந்துவீச்சில் தாஹிர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

Raina
ரெய்னா

இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் அவர் 13 விக்கெட்டுகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

அவரைத் தவரி, தீபக் சஹார், ஷர்துல் தாக்குர் ஆகியோரும் நல்ல ஃபார்மில் உள்ளனர். இன்றைய போட்டியில் சென்னை அணியின் ஆதிக்கம் தொடருமா அல்லது ஹைதராபாத் அணி மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்புமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இவ்விரு அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.

Intro:Body:

hyder


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.