India VS Australia : ஆஸ்திரேலியாவுக்கு 241 ரன்கள் வெற்றி இலக்கு! இந்தியா மோசமான ஆட்டம்!

India VS Australia : ஆஸ்திரேலியாவுக்கு 241 ரன்கள் வெற்றி இலக்கு! இந்தியா மோசமான ஆட்டம்!
World Cup Cricket 2023 Final : உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு ரன்களை இந்திய அணி வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
அகமதாபாத் : 13வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கி நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. லீக் மற்றும் அரைஇறுதி சுற்றுகள் நிறைவு பெற்ற நிலையில், இன்று (நவ. 19) கிளைமாக்ஸ் காட்சி அரங்கேற்றம் நடைபெறுகிறது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் இறுதி ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
-
ஆஸ்திரேலியாவுக்கு 241 ரன்கள் வெற்றி இலக்கு! #cwc2023 #indvsaus #indvsaus20 #etvbharat #etvbharattamil pic.twitter.com/09MWDYw6Ix
— ETVBharat Tamilnadu (@ETVBharatTN) November 19, 2023
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியின் இன்னிங்சை தொடக்க வீரர்கள் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் தொடங்கினர். சுப்மன் கில் நிதானமாக விளையாடிக் கொண்டு இருந்த நேரத்தில் மறுபுறம் ரோகித் சர்மா அடித்து ஆடத் தொடங்கினார்.
இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய சுப்மன் கில் இந்த முறை பெரிய அளவில் சோபிக்கவில்லை. கில் 4 ரன் எடுத்து இருந்த போது மிட்செல் ஸ்டார்க் பந்தில் ஆடம் ஜம்பாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த கேப்டன் ரோகித் சர்மா நீண்ட நேரம் நீடிக்கவில்லை.
கிளென் மேக்ஸ்வெல் பந்தில் ரோகித் சர்மா 47 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் நீண்ட நேரம் நீடிக்கவில்லை, 4 ரன் மட்டும் எடுத்து வந்த வேகத்தில் நடையை கட்டினார். 80 ரன்களுக்குள் அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறியது.
இந்திய அணியின் ரன் மெஷின் விராட் கோலியுடன், கே.எல் ராகுல் இணைந்த நிலையில் இருவரும் அணியை காப்பாற்றும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர். அரைசதம் விளாசிய விராட் கோலி (54 ரன்) கம்மின்ஸ் பந்தில் போல்ட்டாகி ஆட்டமிழந்தார். அவுட்டானதை ஏற்றுக் கொள்ளாத விராட் கோலி சில விநாடிகள் மைதானத்திலேயே மவுனமாக நின்றார்.
-
Innings Break!#TeamIndia post 2⃣4⃣0⃣ on the board!
— BCCI (@BCCI) November 19, 2023
6⃣6⃣ for KL Rahul
5⃣4⃣ for Virat Kohli
4⃣7⃣ for Captain Rohit Sharma
Over to our bowlers now 👌
Scorecard ▶️ https://t.co/uVJ2k8mWSt #CWC23 | #MenInBlue | #INDvAUS | #Final pic.twitter.com/22oteriZnE
இந்திய அணிக்கு அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்த வண்ணம் இருந்தன. ஒருபுறம் கே.எல்.ராகுல் போராடிக் கொண்டு இருக்க, மற்றொரு புறம் இந்திய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து விக்கெட் அணிவகுப்பு நடத்தினர். ரவீந்திர ஜடேஜா 9 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். அரைசதம் கடந்து விளையாடிக் கொண்டு இருந்த கே.எல்.ராகுல் (66 ரன்), மிட்செல் ஸ்டார்க் பந்தில் விக்கெட் கீப்பர் ஜோஸ் இங்கிலீஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
அதன்பின் களமிறங்கிய இந்திய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழ்ந்தனர். முகமது ஷமி 6 ரன், ஜஸ்பிரீத் பும்ரா 1 ரன் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இறுதி கட்டத்தில் நம்பிக்கை அளித்த சூர்யகுமார் யாதவும் பலனளிக்கவில்லை, 18 ரன்களில் ஆட்டமிழந்து இந்திய ரசிகர்களின் நம்பிக்கையை சுக்கு நூறாக நொறுக்கினார்.
50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 240 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. முகமது சிராஜ் 9 ரன்னுடன் களத்தில் கடைசி வரை இருந்தார். ஆஸ்திரேலியா தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டும், பேட் கம்மின்ஸ், ஜோஸ் ஹேசில்வுட் அகியோ தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
கிளென் மேக்ஸ்வெல், ஆடம் ஜம்பா ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். ஆஸ்திரேலிய அணிக்கு 241 ரன்களை வெற்றி இலக்காக இந்திய அணி நிர்ணயித்து உள்ளது.
