தோனிக்கு என்றும் கடமைப்பட்டுள்ளேன் - விராட் கோலி

author img

By

Published : Apr 19, 2019, 10:32 AM IST

கொல்கத்தா: தன்னை மூன்றாவது வீரராக களமிறக்கச் செய்த தோனியை என்றும் மறக்க மாட்டேன் என இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசுகையில்,

"என்னை பொறுத்த வரையில் விஸ்வாசம்தான் மிகவும் முக்கியம் என கருதுவேன். நான் இந்திய அணியில் இடம்பிடித்தப் போது, ஒரு சில போட்டிகளில் மிகவும் மோசமாக செயல்பட்டேன். அந்த தருணத்தில் தோனி எனக்கு பதில் வேறு எதாவது வீரருக்கு வாய்ப்பு அளித்திருக்கலாம் ஆனால், அவர் அதை செய்யாமல் என் மேல் நம்பிக்கை வைத்திருந்தார்.

அதைத்தொடர்ந்து, எனக்கு வழங்கப்பட்ட வாய்ப்புகளை நான் சிறப்பாக பயன்படுத்துக் கொண்டேன். இளம் வீரருக்கு மூன்றாவது வரிசையில் பேட்டிங் செய்யும் வாய்ப்பு அவ்வளவு எளிதாக கிடைக்காது. அந்த வாய்ப்பையும் தோனி எனக்கு தந்ததால் அவரை என்றும் மறக்க மாட்டேன். தற்போது தோனியை பலரும் விமர்சிப்பது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. அவருக்கு நான் எப்போதும் துணையாக இருப்பேன்" எனத் தெரிவித்தார்.

2008ல் சாதாரன பேட்ஸ்மேனாக இந்திய அணியில் நுழைந்த விராட் கோலி, தற்போது உலகிலேயே சிறந்த பேட்ஸ்மேனாக மாறியுள்ளார். விராட் கோலியிடம் ஏதோ தனித்துவம் இருக்கிறது என்பது தோனிக்கு 2008-லேயே தெரிந்திருந்ததால்தான், அவர் தனது ஆரம்பக் காலக்கட்டத்தில் பேட்டிங்கில் சொதப்பினாலும், தோனி அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு அளித்தார் என்பது இதன்மூலம் நிரூபணமாகியுள்ளது.

இந்திய அணிக்காக 227 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி இதுவரை 41 சதம், 49 அரைசதம் என 10,843 ரன்களை அடித்து ரன் மிஷனாக திகழ்கிறார்.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.