ETV Bharat / sitara

இந்தியாவின் முதல் சூப்பர் ஸ்டார் ’ராஜேஷ் கண்ணா’ நினைவு நாள்!

author img

By

Published : Jul 18, 2021, 6:36 PM IST

இந்திய சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் என்றும், முதல் ட்ரீம் பாய் என்றும் அழைக்கப்படும் பாலிவுட் நடிகர் ராஜேஷ் கண்ணாவின் ஒன்பதாவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது மகள் ட்விங்கிள் கண்ணா அவரை நினைவுகூர்ந்துள்ளார்.

ராஜேஷ் கண்ணா
ராஜேஷ் கண்ணா

பாலிவுட் சினிமாவின் 60களின் இறுதியிலும், 70களின் தொடக்கத்திலும் கோலோச்சிப் பறந்த நடிகர் ராஜேஷ் கண்ணா. சினிமாவில் அறிமுகமாக காலக்கட்டத்தில் பல காதல் படங்களில் நடித்து அன்றைய ரசிகைகளின் மனதைக் கவர்ந்த ராஜேஷ் கண்ணாவை இந்தியாவின் முதல் ட்ரீம் பாயாக இன்றளவும் திரை உலகம் கொண்டாடி வருகிறது.

ராஜேஷ் கண்ணா
’ரூப் தேரா மஸ்தானா’ பாடலில் ராஜேஷ் கண்ணா

இந்நிலையில், இன்று (ஜூலை.18) தனது தந்தை ராஜேஷ் கண்ணாவின் ஒன்பதாவது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவரது மகளும், நடிகையுமான ட்விங்கிள் கண்ணா அவரை நினைவுகூர்ந்து பதிவிட்டுள்ளார்.

Twinkle Khanna
தந்தையை நினைவுகூர்ந்த ட்விங்கிள் கண்ணா

தனது பதிவில் 1974ஆம் ஆண்டு ராஜேஷ் கண்ணா, மும்தாஜ், சஞ்சீவ் குமார் நடிப்பில் வெளியான ஆப் கி கசம் படம் குறித்து நினைவுகூர்ந்துள்ள ட்விங்கிள், ”நான் என் அப்பாவின் கண்களைக் கொண்டுள்ளேன். என் மகன் என் அப்பாவின் சிரிப்பைக் கொண்டுள்ளான். மக்கள் அவரது பாகங்களை தங்கள் மனதில் கொண்டுள்ளனர். அவர் இன்னும் வாழ்ந்துகொண்டு தான் இருக்கிறார்” எனப் பதிவிட்டுள்ளார்.

ராஜேஷ் கண்ணா
ராஜேஷ் கண்ணா

தனது 69 வயதில் காலமான ராஜேஷ் கண்ணா, 1969ஆம் ஆண்டு தொடங்கி 1972ஆம் ஆண்டு வரை, ஆராதனா, ஹாத்தி மேரி சாத்தி, ஆனந்த், அமர் ப்ரேம் என தொடர்ச்சியாக 15 வெற்றிப் படங்களைக் கொடுத்து அன்றைய காலக்கட்டத்தில் பெரும் சாதனையைப் படைத்துள்ளார்.

ராஜேஷ் கண்ணா
கறுப்பு வெள்ளை புகைப்படத்தில் ராஜேஷ் கண்ணா

நடிகை டிம்பிள் கபாடியாவை 1973ஆம் ஆண்டு மணந்தார் ராஜேஷ் கண்ணா. இந்தத் தம்பதிக்கு ட்விங்கிள், ரிங்கீ ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர். ராஜேஷ் கண்ணா மறைந்த பின்பு 2013ஆம் ஆண்டு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டு அவர் கவுரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ’ரஜினி, விஜய்லாம் இல்ல...நான் தான் டாப்’ - சாதனைக்கு மேல் சாதனை படைக்கும் தனுஷ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.