ETV Bharat / sitara

எதிர்காலத்தில் அரசியல் பிரவேசம்- ரஜினி பேட்டி!

author img

By

Published : Jul 12, 2021, 10:05 AM IST

Updated : Jul 12, 2021, 6:46 PM IST

மக்கள் மன்றத்தை தொடர்ந்து நடத்துவதா என்பது குறித்து இன்று நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்துகிறார்.

Actor Rajinikanth press meet
Actor Rajinikanth press meet

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் போயஸ்கார்டனில் உள்ள தனது இல்லத்தில் இன்று (ஜூலை 12) செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், “நான் அரசியலுக்கு வரப்போகிறது இல்ல, வர முடியவில்லை.. என்று சொன்னதுக்கு அப்புறம் மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்திக்க முடியவில்லை.

அண்ணாத்த படத்தின் ஷுட்டிங் தாமதமானது. அதை முடித்தபின்பு தேர்தல் வந்தது. அதன்பின்னர் கரோனா வந்துச்சு. நான் அப்புறம் என்னுடைய மெடிக்கல் செக்கப்காக அமெரிக்கா சென்றேன்.

அமெரிக்கா போய் தற்போது திரும்பியுள்ளேன். மக்கள் மன்றத்தை தொடரலாமா? அதன் பணிகள் என்ன? என்ற கேள்விகள் நிர்வாகிகள், ரசிகர்களிடம் என எல்லாரிடமும் இருக்கு.

வருங்காலத்தில் நானும் அரசியலுக்கு வரப்போகிறேனா அல்லது இல்லையா என்ற கேள்விகள் எல்லாரிடமும் உள்ளது. அதைப் பேசி முடிச்சிட்டு உங்களிடம் கூறுகிறேன்” என்றார்.

சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னதாக அரசியலுக்கு வரப்போவதில்லை என ரஜினிகாந்த் அறிக்கை வாயிலாக கூறிய நிலையில், முதல் முறையாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் மக்கள் மன்றம் என்று கூறிவிட்டு சென்றிருந்தால் மட்டும் பரவாயில்லை, வருங்கால அரசியல் குறித்தும் பேசினார். ஆக அவர் வைத்த முற்றுப்புள்ளிக்கு அவரே ஹமா (கால்புள்ளி) வைத்துள்ளார்.

ரஜினி பேட்டி

இதனால் ரஜினி அரசியலுக்கு வருவாரா? என்ற கேள்வி மீண்டும் எழுந்துள்ளது. அத்துடன் மீண்டும் முதலில் இருந்தா என்ற கேள்வியும் எழுகிறது. ரஜினிகாந்த் மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தும் கூட்டம் கோடம்பாக்கம் ஸ்ரீ ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.

இதையும் படிங்க : 'பாட்ஷா' பாணியில் ரஜினியின் அரசியல் நுழைவு?

Last Updated : Jul 12, 2021, 6:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.