'அண்ணாத்த' டீசர்: கொண்டாட்டத்தைத் தொடங்கிய ரசிகர்கள்

author img

By

Published : Oct 14, 2021, 12:53 PM IST

Rajini

ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள 'அண்ணாத்த' படத்தின் டீசர் இன்று (அக். 14) மாலை வெளியாகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் 'அண்ணாத்த'. சிறுத்தை சிவா இயக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்தப் படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ் ராஜ், ஜகபதி பாபு, சதீஷ் உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டி. இமான் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத், சென்னை, லக்னோ, கொல்கத்தா ஆகிய பகுதிகளில் நடந்துமுடிந்த நிலையில், போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன.

இப்படத்தின் போஸ்டர்கள், இரண்டு பாடல்கள் ஆகியவை வெளியாாகி சமூக வலைதளத்தில் வைரலானது. இந்நிலையில், இன்று (அக். 14) மாலை 6 மணிக்கு 'அண்ணாத்த' படத்தின் டீசர் வெளியாகிறது. சமூக வலைதளத்தில் ரசிகர்கள் '#AnnaattheTeaser' என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட்செய்து-வருகின்றனர். 'அண்ணாத்த' திரைப்படம் தீபாவளி கொண்டாட்டமாக நவம்பர் 4ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது.

இதையும் படிங்க: தலைவர் திருவிழா ஆரம்பம் - குஷியில் ரஜினி ரசிகர்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.