கோபப்பட்டா காட்டாறு, கரையும் இல்ல, தடையும் இல்ல - மாஸாக வெளியான அண்ணாத்த டீசர்

author img

By

Published : Oct 14, 2021, 6:10 PM IST

Updated : Oct 14, 2021, 9:41 PM IST

Annaatthe

ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள 'அண்ணாத்த' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் படம் 'அண்ணாத்த'. 'சிறுத்தை' சிவா இயக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்தப் படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ் ராஜ், ஜெகபதி பாபு, சதீஷ் உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டி. இமான் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத், சென்னை, லக்னோ, கொல்கத்தா ஆகிய பகுதிகளில் நடந்துமுடிந்த நிலையில், போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. 'அண்ணாத்த' திரைப்படம் தீபாவளி கொண்டாட்டமாக நவம்பர் 4ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது.

இப்படத்தின் போஸ்டர்கள், இரண்டு பாடல்கள் ஆகியவை வெளியாாகி சமூக வலைதளத்தில் வைரலானது. இந்நிலையில், இன்று (அக்.14) அண்ணாத்த டீசர் வெளியாகியுள்ளது.

டீசரில், ரஜினி "கிராமத்தான குணமாத்தான பாத்துருக்க. கேவப்பட்டு பாத்தது இல்லலே, கோபம் வந்த காட்டாறு. அவனக்கு கரையும் இல்ல. தடையும் இல்ல" என்று பேசும் வசனம் படம் கிரமத்து பின்னணியில் குடும்ப கதையுடன் அதிரடியாக இருக்கும் என தெரிகிறது.

அண்ணாத்த டீசரை வெளியானதை கொண்டாடும் விதமாக ரசிகர்கள் சமூகவலைதளத்தில் '#AnnaattheTeaser' என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: அண்ணாத்த ஆடுறார் ஒத்திக்கோ...

Last Updated :Oct 14, 2021, 9:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.