ETV Bharat / sitara

’மாநாடு’ படத்துக்கு வந்த அடுத்த சிக்கல்!

author img

By

Published : Nov 28, 2021, 7:49 PM IST

சென்னை: நடிகர் சிலம்பரசன், எஸ்.ஜே.சூர்யா நடித்து வெளிவந்துள்ள மாநாடு திரைப்படத்துக்கு மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மாநாடு
மாநாடு

வெங்கட் பிரபு எழுதி இயக்கி, சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள படம் ’மாநாடு’. சிலம்பரசன், எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்தப் படம் வெளியாகி ரசிகர்களிம் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

மாநாடு திரைப்படம் வெளியிடப்பட்டபோது, படம் பார்க்க திரையரங்கம் வருபவர்கள் தடுப்பூசி கட்டாயம் போட்டிருக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு அறிவித்ததாக புகார் எழுந்தது. அதனைத் தொடர்ந்து தடுப்பூசி கட்டாயம் பாேட வேண்டும் என்ற பொது சுகாதாரத்துறையின் உத்தரவுக்கு பல்வேறு தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு எழுந்தது.

இந்நிலையில் படத்தில் தற்போது புகையிலை கட்டுப்பாட்டுக்கான எச்சரிக்கை வாக்கியம் இடம் பெறாதாது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து புகையிலை கட்டுப்பாட்டுக்கான தமிழக மக்கள் அமைப்பின் மாநில அமைப்பாளர் சிரில் அலெக்சாண்டர் தமிழ்நாடு மருத்துவத்துறையிடம் புகார் அளித்துள்ளனர்.

அதில், ”மாநாடு திரைப்படத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா புகைப்பிடிக்கும் காட்சியில் எச்சரிக்கை வாசகம் குறிப்பிடப்படவில்லை. இந்தப் படத்தின் டீசர் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதனால் சிறுவர்கள், இளைஞர்கள் பாதிக்கப்படுவார்கள்.

டீசரில் வெளியிடப்பட்டுள்ள புகைப்பிடிக்கும் காட்சி இளைஞர்கள், சிறுவர்களை ஊக்குவிப்பது போல் அமைந்துள்ளது. எனவே விதிமுறைகளை மீறிய காட்சிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

மாநாடு
மாநாடு

மேலும், “சென்சார் போர்டும் புகைப்பிடிக்கும் காட்சியில் எச்சரிக்கை வாசகத்தை சரியாகக் குறிப்பிடப்படவில்லை. இது குறித்தும் புகார் அளிக்க உள்ளோம். சினிமா தியேட்டரில் வைக்கப்பட்டுள்ள பேனரிலும் புகைப்பிடிக்கும் காட்சி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்தும் புகார் தெரிவிக்க உள்ளோம்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: கஜோல் தங்கை.. சர்கார் நாயகிக்கு கரோனா.. ரசிகர்கள் அதிர்ச்சி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.