ETV Bharat / sitara

'எஃப் 9 தி ஃபாஸ்ட் சாகா': இந்தியாவில் வெளியாகும் தேதி அறிவிப்பு

author img

By

Published : Jul 9, 2021, 7:45 AM IST

வின் டீசல் நடிப்பில் உருவாகியுள்ள 'எஃப் 9 தி ஃபாஸ்ட் சாகா' திரைப்படம் இந்தியாவில் ஆகஸ்ட் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

Fast
Fast

உலக அளவில் பிரபலமான ஹாலிவுட் திரைப்படம் 'ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்'. கடந்த 2001ஆம் ஆண்டு இத்திரைப்படத்தின் முதல் பாகம் வெளியானது.

அதிரடி சண்டைக் காட்சிகள், அட்டகாசமான கார் ரேஸ்கள், அமர்க்களமான கார் கடத்தல் காட்சிகள் நிறைந்த இந்த திரைப்படம், ப்ளாக்பஸ்டர் வரிசையில் இணைந்தது.

இந்த திரைப்பட சீரிஸில் 'ராக்' எனப்படும் டுவெயின் ஜான்சனின் இணையப் படத்தின் வசூல் பலமடங்கு உயர்ந்தது.

இந்தப் படத்தை யுனிவர்சல் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. 'மார்வல்', 'ஹாரி பாட்டர்' போல 'ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்' திரைப்பட வரிசைக்கும் இந்தியாவில் பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது.

பிரமிப்பை ஏற்படுத்தும் பட வசூல்

தற்போது ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் படத்தின் ஒன்பதாம் பாகமான 'எஃப் 9 தி ஃபாஸ்ட் சாகா' அமெரிக்கா, கனடா, சீனா, ரஷ்யா, கொரியா, ஹாங்காங், மத்திய கிழக்கு நாடுகளில் ஜூன் 25ஆம் தேதி வெளியானது. இதுவரை இப்படம் பாக்ஸ் ஆபீஸில் 500 மில்லியன் அமெரிக்கன் டாலர் (ரூ. 3,738.72 கோடி) வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இயக்குநர் ஜஸ்டின் லின் இயக்கியுள்ள இந்தப்படத்தில், வின் டீசலுடன் ஜான் சீனா, கிறிஸ் பிரிட்ஜஸ், ஜோர்டானா ப்ரூஸ்டர், நத்தலி இம்மானுவேல், ஹெலன் மிர்ரன், சார்லிஸ் தெரோன் உள்ளிட்டப் பலர் நடித்துள்ளனர்.

"தி ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ்" சாகா சட்டவிரோத தெரு பந்தயத்தைப் பற்றிய கதையாகத் தொடங்கி, கொள்ளையர்கள் மற்றும் உளவு வேலைகளில் ஈடுபடும் நண்பர்களைப் பற்றி எடுத்து சொல்லும் கதையாக செல்லும்.

இப்படம் இந்தியாவில் ஆகஸ்ட் 5ஆம் தேதி திரையரங்குகளில் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

இதையும் படிங்க: முடிவுக்கு வரும் 'ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்' சகாப்தம்: வின் டீசல் அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.