டாக்டர் படத்தில் தோனியை கொண்டாடிய ரசிகர்கள்

author img

By

Published : Oct 11, 2021, 7:03 PM IST

டாக்டர் -தோனி

திரையரங்கில் டாக்டர் படம் பார்த்த ரசிகர்கள், தோனியை கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

ஐபிஎல் 2021 தொடரின் லீக் போட்டியில் டெல்லி, சென்னை, பெங்களூரு, கொல்கத்தா அணிகள் பிளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதிபெற்றன. இதனிடையே நேற்று (அக்.10) சென்னை அணியை எதிர்த்து டெல்லி அணி மோதியது.

இதில் சென்னை அணி 173 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியை ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர்.

இந்நிலையில் சென்னை அணியின் வெற்றியை ரசிகர்கள் கேக் வெட்டி, பேனர் வைத்து கொண்டாடியது எல்லாம் நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் திரையரங்குகளில் கொண்டாடி பார்த்திருக்கிறோமா?

அதுபோன்ற நிகழ்வு தான் தற்போது நடைபெற்றுள்ளது. அதாவது சிவகார்த்திகேயனின், டாக்டர் படத்தைப் பார்க்கத் திரையரங்கிற்கு சென்ற ரசிகர்கள் ஐபிஎல் போட்டியை தனது செல்போனில் பார்த்துள்ளனர்.

டாக்டர் படத்தில் தோனியை கொண்டாடிய ரசிகர்கள்

அப்போது சென்னை அணி அபார வெற்றி பெற்ற நிலையில் மகிழ்ச்சியில் ரசிகர்கள் எழுந்து நின்று தோனி... தோனி என்று கூச்சலிட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். இதுதொடர்பான வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

இதையும் படிங்க: ஓ மணப்பெண்ணே ரிலீஸ் தேதி வெளியீடு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.