ETV Bharat / sitara

’பீஸ்ட் மோடுலேயே இருங்க’ - விஜய்யை வாழ்த்திய தனுஷ்

author img

By

Published : Jun 22, 2021, 12:22 PM IST

தளபதி விஜய்யின் பிறந்தநாளையொட்டி அவருக்கு நடிகர் தனுஷ் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.

விஜய்
விஜய்

தமிழ் சினிமாவின் முன்னணி நாயகனாக வலம்வரும் விஜய், இன்று (ஜூன் 22) தனது 47ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனையொட்டி அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஒரு வாரத்திற்கு முன்பிலிருந்தே கொண்டாட ஆரம்பித்துவிட்டனர்.

விஜய்க்கு அவரது ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களும் தொடர்ந்து வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். அந்தவகையில் நடிகர் தனுஷ், விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.

தனுஷ் வெளியிட்ட பதிவு
தனுஷ் வெளியிட்ட பதிவு

அதில், “பிறந்தநாள் வாழ்த்துகள் அன்பு விஜய் சார். எப்பவும் இதே பீஸ்ட் மோடுலேயே இருங்க” எனக் குறிப்பிட்டுள்ளார். விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் 65ஆவது பட போஸ்டர்கள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: HBD தேவயானி: 90’ஸ் கிட்ஸ்கள் கட்டிய 'காதல் கோட்டை'க்கு சொந்தக்காரி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.