தனுஷின் 'மாறன்' மோஷன் போஸ்டர் வெளியீடு!

author img

By

Published : Jan 14, 2022, 7:43 PM IST

தனுஷின் 'மாறன்' மோஷன் போஸ்டர் வெளியீடு!

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள மாறன் படத்தின் மோஷன் போஸ்டர் இன்று (ஜனவரி 14) மாலை வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

கார்த்திக் நரேன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாறன்'. தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். இதில் சமுத்திரக்கனி, காளி வெங்கட், மாஸ்டர் மகேந்திரன் உள்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்துவருகின்றனர்.

ஹாலிவுட் படமான 'தி க்ரே மேன்' படப்பிடிப்பை முடித்துத் திரும்பிய தனுஷ், ஹைதராபாத்தில் நடைபெற்ற மாறனின் படப்பிடிப்பில் கலந்துகொண்டார்.

இந்நிலையில் 'மாறன்' படத்தின் அசத்தலான மோஷன் போஸ்டர் இன்று மாலை வெளியானது. இதில் ஜி.வி. பிரகாஷ் குமாரின் பின்னணி இசை மிரட்டலாக உள்ளதாக ரசிகர்கள் கமெண்ட் செய்துவருகின்றனர்.

இத்திரைப்படம் நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியிடப்படவுள்ளது. ரசிகர்களோ 'மாறன்' திரைப்படமானது திரையரங்குகளிலேயே வெளியிடப்பட வேண்டும் என வேண்டுகோள்விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: சபரிமலையில் சாமி தரிசனம் செய்த விக்னேஷ் சிவன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.