ETV Bharat / sitara

Beast Update: உற்சாகத்தில் ரசிகர்கள்

author img

By

Published : Dec 31, 2021, 7:29 PM IST

Updated : Dec 31, 2021, 7:35 PM IST

Beast Update: விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'பீஸ்ட்' படத்தின் வெளியீடு குறித்து அப்படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

beast update  beast team released a update today  beast team released a update  பீஸ்ட் அப்டேட்  பீஸ்ட் போஸ்டர்  பீஸ்ட் ரிலீஸ்
beast update

Beast Update:நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் பீஸ்ட். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

'பீஸ்ட்' படத்தில் செல்வராகவன், யோகி பாபு, பூஹா ஹெக்டே, விடிவி கணேஷ், லிலிபுட் ஃபரூக்கி, ஷைன் டாம் சாக்கோ, அபர்ணா தாஸ், அன்குர் அஜித் விகால் உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்து வருகிறார்கள். ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா, இசையமைப்பாளராக அனிருத், எடிட்டராக நிர்மல், கலை இயக்குநராக கிரண் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு முதலில் ஜார்ஜியாவில் தொடங்கப்பட்டது. அதன் பிறகு சென்னை திரும்பிய படக்குழு அங்கு படத்தின் பிரதான காட்சிகளுக்காகப் பிரமாண்டமான ஷாப்பிங் மால் போன்று செட் அமைத்துப் படப்பிடிப்பு நடத்தியது.

beast update  beast team released a update today  beast team released a update  பீஸ்ட் அப்டேட்  பீஸ்ட் போஸ்டர்  பீஸ்ட் ரிலீஸ்
உற்சாகத்தில் ரசிகர்கள்

தற்போது ஒரு முக்கியக்காட்சிக்காக மீண்டும் ஜார்ஜியா செல்லவிருக்கிறது ‘பீஸ்ட்’ படக்குழு.

படக்குழுவினருடன் விஜய்யும் இந்த மாதம் ஜார்ஜியா செல்ல இருப்பதாகக் கூறப்படுகிறது. அங்கு படப்பிடிப்பை முடித்துவிட்டு மீண்டும் சென்னை திரும்பி, எஞ்சியிருக்கும் காட்சிகளைப் படக்குழு முடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும் படத்தில் விஜய் ராணுவ அலுவலராக நடிப்பதாகவும் கூறப்படுகிறது.

ஜார்ஜியா படப்பிடிப்பு நிறைவடைந்ததும், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் படத்தைத் திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறது.

இதையும் படிங்க: Valimai Release Date Announced:'வலிமை' ரிலீஸ் தேதி அறிவிப்பு; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

Last Updated : Dec 31, 2021, 7:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.