ETV Bharat / sitara

மாஸ்டர் விஜய் படமா? விஜய் சேதுபதி படமா?

author img

By

Published : Jan 28, 2021, 11:02 AM IST

சென்னை: லோகேஷ் கனகராஜ் மீது நடிகர் விஜய் அதிருப்தியில் இருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

master film
master film

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மீது விஜய் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய படம் மாஸ்டர். விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் நடித்திருந்த இப்படம் பொங்கலுக்கு வெளியாகி வெற்றி பெற்றது.

இப்படத்தில் விஜயை விட வில்லனாக நடித்திருந்த விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப்போனது. மேலும் இது விஜய் சேதுபதி படம் என்றே சிலர் கூறிவருகின்றனர்.

இதுகுறித்து முன்னரே இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விஜய்யிடம் கூறியுள்ளாராம். அப்போது பரவாயில்லை என்று கூறிய விஜய், தற்போது பலரும் இவ்வாறே கூறவதால் லோகேஷ் கனகராஜ் மீது விஜய் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: ஓடிடியில் மாஸ்டர் - திரையரங்கு உரிமையாளர்கள் ஆலோசனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.