பிரம்மாண்ட எக்ஸோபிளானெட்... ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி புகைப்படம்...

author img

By

Published : Nov 23, 2022, 5:50 PM IST

ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி புகைப்படம்

ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி மூலம் பிரம்மாண்ட எக்ஸோபிளானெட் வளிமண்டலத்தின் புகைப்படம் கிடைத்துள்ளது.

சான் பிரான்சிஸ்கோ: பிரபஞ்சத்தின் பருப்பொருள், ஆற்றல், நேரம், நட்சத்திரங்கள், கிரகங்கள், கருந்துளைகள், வளிமண்டலங்கள் என்று பூமிக்கு அப்பால் நடக்கும் அறிவியல் விசித்திரங்களை மனித இனம் தொடர்ந்து கண்காணித்துவருகிறது. இதற்காக செயற்கைகோள்கள், விண்கலங்கள், ஏவுகணைகள், தொலைநோக்கிகள் என்று கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. இப்படிப்பட்ட வானளாவிய ஆராய்சிக்காக கண்டுபிடிக்கப்பட்ட ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நாசாவால் ஏவப்பட்டது.

இதன்மூலம் கிடைக்கக்கூடிய புகைப்படங்கள் மற்றும் தரவுகளை கொண்டு பிரபஞ்ச மதிப்பீடுகள் குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டுவருகின்றன. இந்த ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி பூமியிலிருந்து 700 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள WASP-39 b என்னும் கோளின் வளிமண்டலத்தை கண்காணித்துவருகிறது. இந்த கோளின் எக்ஸோபிளானெட் வளிமண்டலத்தின் புகைப்படத்தை ஜேம்ஸ் வெப் பதிவு செய்துள்ளது. பொதுவாக எக்ஸோபிளானெட் என்பது ஒரு கோளை சுற்றியுள்ள விண்வெளி பரப்பாகும். அதில் துணைக்கோள்கள், நட்சத்திரங்கள், விண்கற்கள் அடங்கும்.

இந்த புகைப்படத்தை வைத்து கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் வானியலாளர் நடாலி படால்ஹா ஆய்வுகள் மேற்கொண்டுவருகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், இந்த எக்ஸோபிளானெட் வளிமண்டலத்தின் மூலக்கூறுகள் மற்றும் வேதியியல் சுயவிவரங்கள் பிரபஞ்ச தூரங்களை அளவிட உதவியாக இருக்கலாம். இந்த வளிமண்டலம் பிரம்மாண்ட அகச்சிவப்பு ஒளியால் நிரப்பட்டுள்ளது. இது ஆக்ஸிஜன் போன்ற ஏதாவதொரு வாயுவால் ஏற்பட்டிருக்கலாம். இந்த அகச்சிவப்புக்கு அங்குள்ள ஒரு மிகப்பெரய கோளின் ஆற்றல் வெளிபாடே காரணமாக இருக்கும். இந்த வேதியல் விவரங்கள் குறித்து ஆராய்ச்சிகளை தொடங்கியுள்ளோம் எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: செயற்கை நுண்ணறிவு: உலகளாவிய கூட்டாண்மையின் தலைவராக இந்தியா பொறுப்பேற்க உள்ளது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.