வாட்ஸ்அப்பில் எடிட் ஆப்ஷன் - இனி 15 நிமிடங்களில் அனுப்பிய மெஷேஜில் திருத்திக்கொள்ளலாம்!

author img

By

Published : May 22, 2023, 10:44 PM IST

வாட்ஸ் அப்பில் எடிட் வசதி என புதிய அப்டேட்

வாட்ஸ்அப்பில் அனுப்பப்படும் மெஷேஜ்களை எடிட் செய்யலாம் எனும் புதிய அப்டேட்டை தன் முகநூல் பக்கம் மூலம் வெளியிட்டுள்ளார், அதன் உரிமையாளர் மார்க் ஜுக்கர்பெர்க்.

நாம் அன்றாட வாழ்வில் அடிப்படை தேவைகள் இருக்கின்றனவோ இல்லையோ மொபைல் போன் இல்லாமல் நாள் துவங்குவது இல்லை. காலையில் விடியும் குட் மார்னிங் மெஷேஜிலிருந்து இரவு தூங்கும் முன்னர் சொல்லும் குட் நைட் மெஷேஜ் வரை நம்மை தன் கைக்குள் கட்டி வைத்துள்ளது, இந்த வாட்ஸ்அப் செயலி. தொலைவில் இருக்கும் நண்பர்களுடன் தொடங்கி இன்று பக்கத்திலிருக்கும் அம்மாவிடம் பேசுவதுவரை, நம் பேச்சுரிமையை கட்டுக்குள் கொண்டுள்ளது.

புதுப்புது அப்டேட்ஸ்களை அவ்வப்போது மாற்றிக்கொண்டு உலகெங்கும் தனக்கென ஒரு பயனாளர் கூட்டத்தை கொண்டுள்ளது,வாட்ஸ்அப். இச்செயலி 2009ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தபட்டு இன்று உலகெங்கும் வாட்ஸ்அப் பயன்படுத்தாதோர் யாரும் இல்லை என்ற நிலையை எட்டியுள்ளது. 2014ஆம் ஆண்டிலிருந்து மெட்டா உடன் இணைந்த வாட்ஸ்அப் அவ்வப்போது சில மாற்றங்களைக் கொண்டுள்ளது. எழுத்து, வடிவம், நிறம், அமைப்பு என அனைத்திலும் மாற்றங்களை காலத்திற்கு ஏற்றவாறு புதுத் தன்மைகளுடன் தகவமைத்துக் கொள்கிறது.

சமீபத்தில் மார்க் ஜுக்கர்பெர்க் இது குறித்து தனது முகநூல் பக்கத்தில் புதிய அப்டேட்டின் அம்சங்களைக் குறித்து பதிவிட்டிருந்தார். அவர் அதில், ‘வாட்ஸ்அப் பயனாளர்களுக்கு ஒரு நற்செய்தி. புதிய மாற்றங்களை மீண்டும் வாட்ஸ்அப் சந்திக்கப் போகிறது. தற்போது பயனாளர்கள் தாங்கள் அனுப்பும் மெஷேஜ் அனுப்பிய 15 நிமிடத்திற்குள் பிழை திருத்திக் கொள்ளலாம். இந்த புதிய அம்சம் ஏற்கனவே பயனுக்கு வந்தது. இன்னும் இது வராதவர்களுக்கு ஓரிரு வாரித்திற்குள் இந்த அம்சம் நிறைவேற்றப்படும். இனி ஆட்டோ செக் கொண்டு சிரமப்படவேண்டிய அவசியமில்லை’ எனப் பதிவிட்டிருந்தார்.

இந்த புதிய அம்சத்தின் செயல்பாடு

தற்போது வாட்ஸ்அப்பில் ஏதேனும் மெஷேஜை நண்பருக்கோ அல்லது யாருக்கோ தவறாக அனுப்பிவிட்டால் முன்பு போல் டெலிட் செய்ய வேண்டிய அவசியமில்லை. அதற்குப் பதிலாக மெஷேஜ் அனுப்பிய 15 நிமிடங்களில் தவறுகள் இருக்கும் பட்சத்தில் அதனை திருத்தம்(edit) என கொடுத்து மாற்றிக்கொள்ளலாம். மேலும் இந்த திருத்தம் கொடுக்கும்பொழுது பெறப்படுபவர்கள் எடிட்டட் (edited) என்ற தகவலையும் தெரிந்துகொள்ளலாம்.

இதனைத்தொடர்ந்து இந்த அப்ளிகேஷன் நேர குறிப்பிற்கு கீழே இடம் பெற்றுள்ளது. இதனால் தோற்றம் ஏதும் மாற்றி அமைக்கப்பட வில்லை. இப்படியான புதிய அம்சங்கள் கொண்டுவரப்பட்டாலும் பயனாளர்களின் தனிப்பட்ட மெஷேஜ்களும் பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்களும் பாதுகாக்கப்பட்டே உள்ளது என வாட்ஸ்அப் தரப்பு முழு உத்ரவாதம் வழங்கியுள்ளது.

ஒரு நபர் தன் வாட்ஸ்அப் கணக்கை 2க்கும் மேற்பட்ட போன்களில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கடந்த வாரம் தான் ஒரு அப்டேட் கொண்டு வந்த நிலையில் தற்போது இந்த புதிய அம்சமும் பயனாளர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதையும் படிங்க: பிளம்பர், கொத்தனார், ஓட்டுநர் தேவையா? - வருகிறது தமிழக அரசின் 'செயலி'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.