ரோபோ தயாரிப்பில் இறங்கிய டெஸ்லா - எலான் மஸ்க்கின் அடுத்த நகர்வு

author img

By

Published : Aug 22, 2021, 9:56 PM IST

டெஸ்லா, எலான் மஸ்க், ரோபோ, tesla robot, elon musk tamil, tesla tamil, டெஸ்லா ரோபோ, மின்சார கார்

பிரபல பேட்டரி கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா, ரோபோக்களை தயாரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. பயனர்களை எளிதில் கவரும்படியாக, அவர்களின் தேவைகளை பூர்த்திசெய்யும் வகையில், எளிதில் அணுகும்படியான ரோபோவை டெஸ்லா உருவாக்க முனைப்பு காட்டிவருகிறது.

அமெரிக்காவைச் சேர்ந்த மின்சார வாகனத் தயாரிப்பாளரான டெஸ்லா, சூரியஒளி தகடுகளை மேம்பட்ட புதிய தொழில்நுட்பத்தில் தயாரித்து விற்பனை செய்து வருகிறது.

தற்போது இந்த நிறுவனம் மனித உருவம் கொண்ட ரோபோட் தயாரித்து, வியாபாரத்தில் களமிறங்க இருக்கிறது.

அதன்படி டெஸ்லா பாட் பெயரில் முதல் ரோபோட்டை டெஸ்லா நிறுவனம் அறிமுகம் செய்தது.

இதுகுறித்த அறிவிப்பின்போது, ரோபோட் ஆடை அணிந்த நடிகர் ஒருவர் மேடையில் தோன்றினார். டெஸ்லா பாட் இப்படித்தான் காட்சியளிக்கும் என அதன் நிறுவனத்தலைவர் எலான் மஸ்க் தெரிவித்தார்.

டெஸ்லா, எலான் மஸ்க், ரோபோ, tesla robot, elon musk tamil, tesla tamil, டெஸ்லா ரோபோ, மின்சார கார்

டெஸ்லா பாட் ரோபோட் மாடல் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படுகிறது. டெஸ்லா பாட் 'ஆப்டிமஸ்' எனும் குறியீட்டு பெயரில் உருவாகிறது. மின்சார கார்களின் தானியங்கி அம்சத்திற்கு பயன்படுத்தும் சிப், சென்சார்களையே டெஸ்லா தனது ரோபோட்டிலும் பயன்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.