தமிழ்நாடு சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் தொடங்கியது!
Published: Nov 18, 2023, 10:03 AM

சென்னை: சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி காலம் தாழ்த்தி வந்த நிலையில், தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், ஆளுநரின் செயலாளர் மற்றும் உள்துறை அமைச்சகத்துக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது.
அது மட்டுமல்லாமல், காலவரையறையின்றி மசோதாக்களைக் கிடப்பில் போடுவது மிகவும் கவலைக்குரியது என உச்ச நீதிமன்றம் கூறிய நிலையில், நீண்ட நாட்களாக ஆளுநரின் ஒப்புதலுக்காகக் காத்திருந்த மசோதாக்களில் சில விளக்கங்களைக் கேட்டு ஆளுநர் மாளிகை தமிழ்நாடு அரசுக்கு திருப்பி அனுப்பியுள்ளது.
இந்நிலையில், இன்று (நவ.18) சிறப்புச் சட்டப்பேரவை கூட்டத்தில், சில மசோதாக்களை பேரவையில் நிறைவேற்றி, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும் எனத் தெரிகிறது. இந்த சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடரில், பாஜகவின் சட்டப் பேரவைக்குழுவின் தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துக் கொள்வதாகத் தெரிவித்தா.
மேலும், சட்டப் பேரவையின் நடவடிக்கைகளைப் பொறுத்தும், அங்கு கொண்டு வரப்படும் தீர்மானங்களைப் பொறுத்தும் தங்களின் நடவடிக்கை இருக்கும் எனவும் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் கலந்துக் கொள்ள உள்ளனர். அதேபோல், ஓ.பன்னீர்செல்வமும் இந்த கூட்டத்தில் பங்கேற்கவுள்ளார். தற்போது, தமிழ்நாடு சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அதன் நேரலைக் காட்சிகள்..