தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் உரை!
Published: Nov 21, 2023, 10:38 AM

சென்னை: இசை, கவின் கலை மற்றும் நிகழ்த்துக் கலையின் அனைத்துப் பிரிவுகளிலும் கல்வி பயிற்சி வழங்குதல், இசை, கவின்கலை மற்றும் நிகழ்த்துக் கலையில் ஆராய்ச்சிக்கான வழிவகைகள், கல்வி மேம்பாடு மற்றும் அந்தத் துறை தொடர்பான அறிவுசார் பரப்புரை செய்வதற்கும், பாரம்பரிய இந்திய இசை, நிகழ்த்துக்கலை மற்றும் கவின் கலைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பாதுகாத்தல், மேம்படுத்துதல் மற்றும் பிரபலப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலும், கடந்த 2013ஆம் ஆண்டில் தமிழ்நாடு முதலமைச்சரை வேந்தராகக் கொண்டு, தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்டது.
இந்த நிலையில், சென்னையில் உள்ள தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்தின் இரண்டாம் பட்டமளிப்பு விழா, இன்று (நவ.21) காலை 10.30 மணியளவில் சென்னை கலைவாணர் அரங்கில் வைத்து நடைபெறுகிறது. இதில், தமிழ்நாடு முதலமைச்சரும், தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்தின் வேந்தருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு விழா பேருரையாற்றுகிறார். அதன் நேரலைக் காட்சிகள்..