தென்மண்டல வானிலை மையம் இயக்குநர் செய்தியாளர் சந்திப்பு!
Published: Nov 20, 2023, 3:01 PM

சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விட்டு விட்டு மழை பொழிந்து வருகிறது. இந்நிலையில், சென்னையில் காலை முதல் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வருகிறது. நகரின் சில பகுதிகளில் அவ்வப்போது தூரல் மற்றும் சாரல் மழை பெய்து வந்தது.
தென் தமிழக பகுதிகளான தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வந்தது. தமிழகத்தில் கடலூர் நாகை விழுப்புரம் மயிலாடுதுறை மற்றும் சில கடலோர மாவட்டங்களில் மழையானது தொடர்ந்து பெய்து வருகிறது.
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது மேலும் தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக 24_ஆம் தேதி வரை தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழையானது பெய்ய வாய்ப்புள்ளதாக தென் மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இனி வரும் காலங்களில் மழையின் தாக்கம் அதிகளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் காலங்களில் மழையின் பாதிப்பு எந்த வகையில் இருக்கும் என்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்து வருகிறார். அதன் நேரலைக் காட்சிகள்..