லிபியா வெள்ளத்தில் 4 ஆயிரம் பேர் உயிரிழப்பு.. ஐ.நா. அறிக்கையால் ஏற்பட்ட குழப்பம்!

லிபியா வெள்ளத்தில் 4 ஆயிரம் பேர் உயிரிழப்பு.. ஐ.நா. அறிக்கையால் ஏற்பட்ட குழப்பம்!
லிபியாவில் மழை வெள்ளத்தில் சிக்கி 4 ஆயிரம் பேர் உயிரிழந்து இருக்கலாம் என ஐ.நா தெரிவித்து உள்ளது. ஏறத்தாழ 9 ஆயிரம் பேர் படுகாயம் அடைந்ததாக தகவல் கூறப்பட்டு உள்ளது.
டெர்னா (லிபியா): லிபியா வெள்ளத்தில் இறப்பு எண்ணிக்கை குறித்து முன்னதாக அளிக்கப்பட்ட தகவலை ஐக்கிய நாடுகள் சபை திருத்தம் செய்துள்ளது. ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகாரங்களுக்கான அலுவலகம் (OCHA) முன்னதாக தெரிவித்த 11,300 என்ற எண்ணிக்கைக்குப் பதிலாக குறைந்தது 3,958 என கூறியுள்ளது.
சமீபத்திய தகவளின்படி, 9000 பேர் இன்னும் காணவில்லை எனக் கூறப்படுகிறது. இருப்பினும், லிபிய செஞ்சிலுவைச் சங்கத்தின் புள்ளி விவரங்களை மேற்கோள் காட்டி கடந்த சனிக்கிழமை அளித்த தகவளின்படி OCHA, அதன் முந்தைய தகவளில் டெர்னாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் குறைந்தது 11,300 பேர் இறந்ததாக கூறியது.
ஐ.நா பொதுச்செயலாளரின் துணை செய்தித் தொடர்பாளர் ஃபர்ஹான் ஹக் பேசுகையில், "நாங்கள் WHO ஆல் சரிபார்க்கப்பட்ட தகவளின்படியே எண்ணிக்கையை முடிவுசெய்தோம்" என கூறினார். ஆனால், டெர்னாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் அதிகமான இறப்பு எண்ணிக்கையை தான் ஐ.நா., வுக்கு அளிக்கவில்லை என லிபிய ரெட் கிரசண்ட் சொசைட்டி முன்னதாகவே தெரிவித்துள்ளது.
மேலும், ஐ.நா., ஏன் இறப்பு எண்ணிக்கையை தவராக மேற்கோள் காட்டியது என்ற கேள்விக்கு ஹக், "பல துயரங்களுக்கு மத்தியில் நாங்கள் எண்ணிக்கைகளை திருத்தம் செய்கிறோம், அதுதான் இங்கு நடந்தது. நாங்கள் எண்ணிக்கையை சரிபார்க்க பல தரப்புடன் குறுக்கு சோதனை செய்வோம். நாங்கள் இத்தகைய திருத்தங்கள் செய்வதற்கு காரணம் நாங்கள் குறுக்கு சோதனை செய்வதனால் தான். இறப்பு எண்ணிக்கை நிலையாக இருக்காது, கூடவோ குறையவோ செய்யலாம்" என தெரிவித்தார்.
டெர்னாவின் கடற்கரையில் பேரளிவுக்கான பின்விளைவுகள் தெளிவாக தெரிகிறது, மீட்புமபணியினர் சோர்வின்றி மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடலில் உடல்கள் இருக்கிறதா என்பதை ஹெலிகாப்டர் மூலம் தேடிவருகின்றனர். மேலும் மீட்பு பணிக்கு இடையூராக இருப்பவற்றை அகற்றும் முயற்சியில் தோண்டுபவர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.
குறைந்தது 120,000 மக்கள் தொகை கொண்ட டெர்னாவில் 2 அணைகள் உடைந்து ஊறுக்குல் வெள்ளம் புகுந்த நிலையில் மாவட்டம் முழுவதும் அடித்து செல்லப்பட்டது. மேலும் பலர் மன்னுக்குல் புதைந்தனர். இந்த பேரளிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ 71 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கான வேண்டுகோளை முன்வைத்ததாக ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகார அலுவலகம் தெரிவித்துள்ளது.
கிழக்கு லிபியாவில் கிட்டத்தட்ட 2,50,000 பேருக்கு அவசர உதவியாக அத்தியாவசிய மருந்துகள், அறுவை சிகிச்சை பொருட்கள் மற்றும் உடல் பைகளை ஆகியவற்றை வழங்க உலக சுகாதார அமைப்பும் நடவடிக்கை எடுத்துள்ளது. சவூதி அரேபியாவும் ரஷ்யாவும் நடமாடும் மருத்துவமனைகள் உட்பட உதவி விமானங்களை வழங்கியுள்ளன. அதே நேரத்தில் இத்தாலிய கடற்படைக் கப்பல் டெர்னாவிற்கு கூடாரங்கள், போர்வைகள், தண்ணீர் குழாய்கள் மற்றும் டிராக்டர்கள் போன்ற பொருட்களுடன் வந்தது.
