சீனாவில் ஓடுபாதையில் திடீரென தீப்பிடித்து எரிந்த விமானம்
Updated on: May 12, 2022, 10:27 AM IST

சீனாவில் ஓடுபாதையில் திடீரென தீப்பிடித்து எரிந்த விமானம்
Updated on: May 12, 2022, 10:27 AM IST
சீனாவின் சோங்கிங் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட திபெத் ஏர்லைன்ஸ் விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் பயணிகள் உள்பட 122 பேர் உயிர் தப்பினர்.
பெய்ஜிங்: சீனாவின் சோங்கிங் (Chongqing )சர்வதேச விமான நிலையத்திலிருந்து இன்று காலை 9 விமான ஊழியர்கள் மற்றும் 113 பயனிகளுடன் புறப்பட்ட திபெத் ஏர்லைன்ஸ் விமானம் ஓடுபாதையில் செல்லும் பொழுது திடீரென தீபிடித்து எரிந்தது. இதனை அறிந்த விமானிகள் விமானத்தை நிறுத்தி உடனடியாக பயனிகளை வெளியேற்றியதால் பெரிதளவில் சேதம் தவிர்க்கபட்டது.
இருப்பினும் விமானத்தில் பயனித்த 25 பயணிகள் சிறு, சிறு காயங்ளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு உள்ளனர். மேலும் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயனைப்பு துறையினர் விமானத்தில் ஏற்பட்ட தீயை அணைத்தனர். இதுதொடர்பாக உயர் மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
இதையும் படிங்க: ஸ்பைஸ் ஜெட் விமானம் குலுங்கிய சம்பவம் - குழு அமைத்து தீவிர விசாரணை...!
