Nobel Prize 2022: வேதியலுக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிப்பு!

author img

By

Published : Oct 5, 2022, 5:40 PM IST

Nobel

2022ஆம் ஆண்டின் வேதியலுக்கான நோபல் பரிசு, கரோலின் பெர்டோசி, மோர்டன் மெல்டல், கே.பேரி ஷார்ப்லெஸ் ஆகிய மூன்று விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டாக்ஹோம்(ஸ்வீடன்): 2022ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் கடந்த 3ஆம் தேதி முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

கடந்த 3ஆம் தேதி மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி ஸ்வாந்தே பாபோவுக்கு மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று(அக்.4) இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இயற்பியலுக்கான நோபல் பரிசு, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி அலைன் ஆஸ்பெக்ட், அமெரிக்க விஞ்ஞானி ஜான் எஃப் கிளாசர், ஆஸ்திரியாவைச் சேர்ந்த ஆன்டன் ஸீலிங்கர் ஆகிய மூவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இன்று(அக்.5) வேதியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டின் வேதியலுக்கான நோபல் பரிசு, அமெரிக்காவைச் சேர்ந்த கரோலின் பெர்டோசி, டென்மார்க்கைச் சேர்ந்த மோர்டன் மெல்டல், அமெரிக்காவைச் சேர்ந்த கே.பேரி ஷார்ப்லெஸ் ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மூலக்கூறு வேதியியல் ஆராய்ச்சியில் (க்ளிக் கெமிஸ்ட்ரி) பங்காற்றியதற்காக இந்த நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 10ஆம் தேதி பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட உள்ளது.

இதையும் படிங்க:Nobel Prize 2022: இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.