ஆப்பிள் நிறுவனத்தின் பெரிய திரை iPad செப்டம்பரில் அறிமுகம்

author img

By

Published : Aug 16, 2022, 5:06 PM IST

Etv Bharatஆப்பிள் நிறுவனத்தின் பெரிய திரை iPad  செப்டம்பரில் அறிமுகம்

தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் பெரிய திரையுடன் கூடிய புதிய ஐபாட் ப்ரோ மற்றும் நுழைவு நிலை ஐபேடை செப்டம்பரில் அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளது.

சான் பிரான்சிஸ்கோ(அமெரிக்கா): பிரபல மொபைல் தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள், ஐபாட் ப்ரோவில் புதிததாக அப்டேட் செய்ய உள்ளது. M1 சிப்பிலிருந்து M2-க்கு மேம்படுத்தி, பெரிய திரையுடன் கூடிய புதிய நுழைவு-நிலை iPad ஐ அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 10ஆவது தலைமுறை iPad மற்றும் iPad Pro-களில் சில மாற்றங்களைக்கொண்டு வர இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

புதிய 10ஆவது தலைமுறை ஐபேட் அதிக நீளத்துடன் மெல்லிய புதிய வடிவமைப்பைக் கொண்டிருப்பதாக ஆப்பிள் நிறுவனத்தின் சார்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் அதன் வடிவம் ஒரு தட்டையான உளிச்சாயுமோரம் (iPadஇல் இருக்கும் தொடுதிரையின் தடிமன் அல்லது வெளிப்புற சட்டத்தை விவரிக்கும் சொல்)அமைப்பில் உள்ளது. தற்போதுள்ள 10.2-இன்ச் திரையை விட இது மிகவும் சிறப்பான வடிவத்தைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

ஆனால், இதன் சரியான அளவு குறிப்பிடப்படவில்லை. இந்த மாடலில் ஆப்பிளின் புதிய கண்டுபிடிப்பான A14 பயோனிக் வசதி, 5G இணைய வேகம் ஆகியவையும் உள்ளன.

மீண்டும் நீண்டுகொண்டிருக்கும் பின்புற கேமரா பம்ப் மற்றும் 3.5mm ஹெட்ஃபோன் ஜாக் போன்ற புதிய வசதிகளும் பொருத்தப்பட்டிருக்கும். தொடக்க நிலை iPad-ஐ மேம்படுத்தும் அதே நேரத்தில், ஆப்பிள் iPad Pro-ஐ மேம்படுத்தவும் ஆப்பிள் நிறுவனம் முயற்சி எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், பிரீமியம் டேப்லெட் வரிசையில் சிப் M1 இலிருந்து M2-க்கு புதுப்பிக்கப்படும். இந்த புதிய அப்டேட்களுடன் கூடிய iPad செப்டம்பர் முதல் சந்தைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:பயனர்களின் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை ஏற்ற ட்விட்டர் நிறுவனம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.