ஆப்கானில் ஹெலிகாப்டர் விபத்து - 2 விமானிகள் பலி!

author img

By

Published : May 22, 2023, 10:22 AM IST

Afghanistan: Helicopter crash kills two pilots

ஆப்கானிஸ்தானில், உயர் மின் அழுத்த கம்பி மீது, எதிர்பாராத விதமாக மோதி எம்டி-530 ரக ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணித்த இரண்டு விமானிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

காபூல்: ஆப்கானிஸ்தான் வடக்கு சமாங்கன் மாகாணத்தில், ரோந்துப் பணியில் ஈடுபட்டு இருந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான சம்பவத்தில், 2 விமானிகள் பலியாகினர். அமெரிக்கா ராணுவத்தின் பின்வாங்கலுக்கு பிறகு ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை தாலிபன்கள் கைப்பற்றினர்.

ராணுவத்தை கட்டமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தாலிபன்கள் அதற்கு தேவையான உபகரணங்கள், ஆயுதங்களை அண்டை நாடுகள் மற்றும் நட்பு நாடுகளிடம் இருந்து பெற்று வருகின்றனர். இந்நிலையில், சமாங்கன் மாகாணத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.

விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர், விமானப்படைக்கு சொந்தமானது என்றும், எம்டி- 530 ரக இந்த ஹெலிகாப்டர், உயர் மின் அழுத்த கம்பியின் மீது மோதியதால், அதில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த விபத்தில், 2 விமானிகள் பலி ஆனதாக, பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க : சவுதி அரேபியாவின் முதல் விண்வெளி வீராங்கனை... ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்டில் சர்வதேச விண்வெளி மையம் பயணம்...

முன்னதாக, சமாங்கன் மாகாண தாலிபான் அமைப்பின் தகவல் மற்றும் கலாச்சாரத் துறைத் தலைவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, "சமாங்கன் மாகாணத்தின் குல்ம் மாவட்டத்தில், ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக தகவல் கிடைத்தது. இராணுவ ஹெலிகாப்டர், இந்த பகுதியில், இதுபோன்று விபத்துக்குள்ளாவது, இது முதல்முறை அல்ல. தொழில்நுட்ப காரணங்களினால், இதுபோன்று, அதிக முறை, விபத்துக்கள் நிகழ்கின்றன. இதுபோன்ற விபத்துகளில், அதிக அளவிலான, விமானிகள் பலியாவதாக" தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தான் நாட்டில், 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் அங்கு, தாலிபான்களின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அப்போதில் இருந்து, விமானத் துறையைச் சேர்ந்த ஹெலிகாப்டர்கள் விபத்துக்கு உள்ளாவது தொடர்கதையாக உள்ளது. ஆனால், இதற்கான காரணம் மட்டும், புரியாத புதிராகவே உள்ளது.

2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், காபூல் நகரில், ராணுவ பயிற்சி ஒத்திகையின் போது, அமெரிக்க தயாரிப்பான பிளாக் ஹாக் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான சம்பவத்தில், குறைந்தது 3 பேர் பலியாகி இருந்ததாக, தாலிபான் பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தாலிபான் அரசின் வசம், எத்தனை அமெரிக்க விமானங்கள், ஹெலிகாப்டர்கள் உள்ளன என்பது தெரியவில்லை. கடந்த ஆண்டு, ஆகஸ்ட் மாத பிற்பகுதியிலேயே, ஆப்கன் அரசிற்கு, அமெரிக்கா அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டது. இதன் காரணமாக, அப்போது பணியில் இருந்த நூற்றுக்கணக்கான ஆப்கன் விமானிகள், மத்திய ஆசிய நாடுகளான தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று விட்டதாக, தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: ஜப்பானில் பிரதமர் நரேந்திர மோடி; அவரது ஆடையின் விசேஷம் தெரியுமா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.